நண்பர் ஒருவர் வந்தார். பங்கு வணிகத்தில் ஈடுபட நினைக்கிறேன். அது பற்றி விவரங்களை சொல்லி தா என்றார். ஆகா நம்ம Saravana Kumar வுக்கு ஒரு வாடிக்கையாளர் அறிமுகம் செய்திடலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். பங்கு என்றால் என்ன, வாங்குதல், விற்றல் என்பது பற்றி அடிப்படை விசயங்களை விளக்கினேன். எல்லாம் முடிந்த பின் உங்களுக்கு தோன்றும் சந்தேகத்தை கேளுங்க என்ற போது நிப்டி(NIFTY) என்றால் என்ன? இதை வாங்கி விற்றால் நல்ல லாபம் வருமா? என்றார். அதிக அனுபவஸ்தர்கள் செய்யும் செயலான நிப்டியில் விளையாட போவோருக்கு இன்னேரம் அரிச்சுவடியை சொல்லி கொடுத்து நேரம் வீணா போச்சேன்னு வருத்த பட்டேன். அடுத்த கேள்வி இத்தனை ரூபாய் போட்டால் மாதம் இத்தனை ரூபாய் -7சதம்- லாபம் வருமா? என்றார். கொஞ்சம் விவரமா பேசினால் யாரோ உள்ளூர் ஆசாமி ஆகாச கோட்டை கட்ட வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று புரிந்தது. சரி Saravana Kumar விடம் இப்போதைக்கு அறிமுகம் செய்வதை கைவிட்டு விட்டு பார்த்து செய்யப்பா என்று அனுப்பி வைத்தேன். அப்ப டீ வைத்த கொடுத்தனுப்பிய ஆத்தா பின்னர் வந்து ஏம்ப்பா இத்தனை 10-15 வருசமா தொழிலில் இருக்கும் sara விட்டுட்டு ஏன் புது ஆசாமியிடம் போக விட்டேன்னு கேட்டார். என்னத்த சொல்ல.. “ஙே” -ன்னு விழிச்சுகிட்டு இருக்கேன்..
Leave a Reply