வெகு வருட – மன – இடைவெளிக்கு பின்னர் எனது பெரிய சித்தப்பாவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே இன்று சந்தித்தேன். மதிய உணவு + கோபி சில்லி என அமர்களமாக அவருடனேயே முடிந்தது. இருபக்க உற்றார், உறவினர் பற்றிய விவர பரிமாற்றம் இனிதே நடைபெற்றது. விரைவில் முகபுத்தகம்(facebook) வாயிலாக சந்திப்போம் என்றார். அளவில்லா மகிழ்ச்சி.. நமக்கு முந்தைய தலைமுறையான எனது தந்தையார் தலைமுறையில் முதலாவது ஆளாக முகபுத்தகத்தினுள் வருகிறார். எங்கள் குடும்பங்களில் முதலாவதாக கணிணி வாங்கியவரும் அவரே என்பது இன்று நினைவுக்கு வருகிறது. விரைவில் அவருடனான நட்பு கணக்கு துவங்க பட்டு விடும் என்று காத்திருக்கேன். சகோதரியார் (சித்தப்பா மகள்) கோவைக்கே குடியேறுகிறார் என்ற விவரத்தையும் சொல்லி சென்றார். வீட்டிற்க்கு வந்து ஆத்தாவிடம் சொன்னால் நீங்க வேண்டாமானால் கோவிச்சுக்குவிங்க, வேணுமின்னால் சேர்ந்துக்குவிங்க.. நாங்க பொம்பளைங்க தான் நடுவிலே கெட்டவங்க இல்லையா என்றார்.. அவருடைய மனசிலிருந்து வராவிடினும், வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாது எல்லா பருவ கால நிலைகளும் மாறும் என்றெல்லாம் தத்துவம் பேசாது வழக்கம் போல “ஙே” என்று விழித்து கொண்டு இருக்கிறேன்.. #ஆத்தாசிலகுறிப்புகள்
Leave a Reply