புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

ஆத்தா:சில குறிப்புகள் – 5

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும், செலாவணி சந்தையிலும் இரத்த ஆறு ஓடியதை பற்றி ஆத்தாவுடன் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளைக்கு முன்னாடி நீ என்னமோ வீடியோ கேம் போல சந்தையில் வியாபாரம் செய்யபோவதாக சொன்னீயே என்ன ஆச்சு என்றார்.

– இது மெய்நிகர் விளையாட்டு – virtual reality games – முறையினை அடிப்படையாக கொண்டது. ஜப்பானியர்களின் டொம்மகாச்சி – 
http://en.wikipedia.org/wiki/Tamagotchi – எனும் மெய்நிகர் வளர்ப்பு பிராணிகள் போன்றது. இந்த பிராணிகளுக்கு நேரா நேரத்திற்கு உணவிடுதல், ஆய் கூட்டி போதல் போன்ற அனைத்து பராமரிப்புகளையும் செய்யனும். ஆனால் நிசமாக உயிரினம் நம்மிடையே இராது. அது போன்றதே எனது விளையாட்டு வாணிக முயற்ச்சியும். நானும் மற்ற முதலீட்டாளர்கள் போலவே சந்தையையும், பொருளாதாரத்தையும் கவனித்து வரனும். அலசி ஆராயனும். எதை, எப்படி வாங்குவது, விற்பது என்பதை முடிவு செய்து ஆர்டர் போடனும். உண்மையில் காசு மட்டும் போட வேண்டியதில்லை. அம்புட்டுதான் வித்தியாசம். ஆர்வமுள்ளவர்கள் இந்த விக்கி பக்கத்தை படித்து பார்க்கலாம். –

அட ஆமாம் நானும் http://siva.tamilpayani.com/archives/114 -2010 ஆகஸ்ட்டுலேயே வியாபாரத்தை துவக்கினோமே அதன்  லாப/நட்ட நிலவரம் என்ன ஆச்சுன்னு கணக்கு பார்த்தேன். துவக்கத்தில் போட பட்ட ஒரு லட்சம் என்பது கடுமையான நட்டத்தை சந்தித்து முதலீடே பகுதிக்கும் குறைவாக குன்றி விட்டது. பல்வேறு விதமான வர்த்தக போக்குகளை செயல் படுத்தி பார்த்த பின் எனக்கான ஒரு முறையை கண்டுள்ளேன். சமீப காலமாக லாபகரமாகவே நடந்து வருகிறது. அது என்ன என்பதையெல்லாம் http://anusishares.blogspot.in/ முகவரியினை பின்தொடர்புவர்கள் எளிமையா கண்டுக்கலாம். இப்போதைக்கு கையிருப்பில் உள்ளவைகளை எல்லாம் வாங்கியவிலையிட்டால் அசலை தாண்டி 4500 ரூவா லாபம். கையிருப்பு பங்குகளை நடப்பு சந்தை விலையிட்டால் -2800 ரூவா நட்டம். எப்படியாகினும் அசலான ஒரு லட்சத்தை கிட்டதட்ட தேற்றி காப்பாற்றி கொண்டு விட்டேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே. 

அசலை தேற்றவே மூன்றாண்டா என்றார் ஆத்தா.. அது சரி நட்டமாகி பாதியாகி போனதை மீண்டும் முழு அளவில் கொண்டு வந்துள்ளேன். சொல்ல போனால் அந்த இடத்திலிருந்து பார்த்தால் இரட்டிப்பாக்கியுள்ளேன் என்று விளக்க நினைத்தும் அமைதியாக விட்டேன். எந்த வகையிலும் தொழில் கற்று கொண்டு நமக்கான பாணியினை அமைத்து கொள்ளுதல் என்பது இந்த முறையினை தவிர வேறு எந்த வகையிலும் சிரமமே. ஏகப்பட்ட முறைமைகள் பரிசோதனை மற்றும் தோல்விகளாக நல்ல அனுபவ பாடம். தின வணிகத்தில் சில நாட்களில் இழந்ததை பல மாதங்கள் (வருடங்கள்) என்ற அளவில் முயன்று திரும்ப எடுக்க வேண்டிதாகி விட்டது. எனது படிப்பினை மிக எளிமையாக இங்கே சித்திர வடிவில்.. தனது பத்து கட்டளைகளினுள் ஒன்றாக ஏதேனும் சொல்லியிருக்கலாம் தான்.. 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>