வழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை நடைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.
கேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு 15-20 வயசு இருக்கும் போதே பையனுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்கள் எதிர்காலத்தை கணித்து தெளிவா உனக்கு இந்த வயசுலேதான், இப்படிதான் திருமணம் ஆகுமுன்னு சொல்லிடலாமே. எத்தனை பையனுக காலத்தையும், காசையும் தொலைச்சுட்டு மனசை கெடுத்திட்டு வாழ வேண்டியிருக்கு. எனக்கு அப்படி சொல்லியிருந்தா உலக அழகியிடம் ஐ லவ் யூ சொல்லிட்டு காலத்தை வீணடிச்சுட்டு இருந்திருக்க மாட்டேனே..
Leave a Reply