குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

ஆத்தா:சில குறிப்புகள் – 7

கடந்த சில வாரங்களாக சரியாக எழுத முடியாது போன ஆத்தா சில குறிப்புகள் மீண்டும் தொடர்கிறது. விடாது கருப்பு..   

வருடங்களுக்கும் மேலாக சிலாகித்து பேசி வரும் சாந்தி கியர்ஸ் உணவகத்திற்க்கு இன்னமும் மதிய உணவிற்க்கு ஆத்தாவை அழைத்து செல்லாத குறை இருந்து வந்தது. ஆத்தாவால் தினசரி சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல் என்று மதிய உணவினை செய்யாமல் இருக்க இயலுவதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் ஆத்தாவிற்க்கு உடல்நல கேடு என்று அர்த்தம். நானும் அவ்வப்போது அம்மா வாங்க ஒரு நாளைக்கு போய் உண்டு விட்டு வருவோம் என்றால் இன்று, நாளை என்று ஒத்தி போட்டு கொண்டே சென்றார்.

இன்று என்ன ஆனாலும் சரி என்று கிளப்பி விட்டேன். மிக நீண்ட வளைந்து, நெளிந்த வரிசை. ஆனாலும் மிக வேகமாகவே சென்றது. ஏதோ திருப்பதி திருமலையில் வரிசை நிற்பது போல ஒரு பிரமை. கூட நின்று இருந்த ஒருவர் இது போன்று வரிசை நின்று சாப்பிட கூடிய ரெஸ்ட்டாரண்டை இன்று தான், இங்கு தான் காண்கிறேன் என்றார். உண்மைதானே.

உணவினை பெற்று கொண்டு நல்ல இடமாக கண்டறிந்து அமர்ந்து உண்டோம். நான் வாய் இருக்க மாட்டாமல் உணவினை மிச்சம் வைக்க கூடாது – வீணடித்தல்- என்ற எனது கொள்கை பிடிப்பை விளம்ப சரி என்னால் அனைத்தையும் உண்ண முடியவில்லை என்று சிலவற்றை என் பக்கம் தள்ளி விட்டார். இறுதியில் நானும், அம்மாவும் 133% , 67% என்ற ரீதியில் உண்டு முடித்தோம். ஆத்தி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல மலைப்பாம்பு ஒரு ஆட்டை அப்படியே முழுங்கினால் எப்படி இருக்குமோ அந்த ஒரு நிலைமை. வெளியே வந்தால் அதிசயமாய் ஐஸ் சாப்பிடலாமா என்ற கேள்வி. சரி ஆடு முழுங்கிய பின்னர் ஒரு ஆம்லெட் சாப்பிடதா கணக்கு வைச்சுக்கலாம் என்று அதையும் சாப்பிட்டு விட்டு வந்தேன்.

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்கிறது இந்து மதம். அந்த அன்னதானத்தை நவீன முதலாளித்துவ சமூகத்தில் இலவசமாக கொடுக்காமல் நட்டமில்லா விலையில் அழித்தல் என்பதே சாதனையாகும். வாழ்க அவர்கள் சேவை. ஆத்தாவிற்க்கு காடாக, பாம்பு ஊர்ந்து கொண்டிருந்த எங்கள் ஊரின் ஒரு இடத்தில் இத்தனை மக்கள் வந்து இந்தளவு பயனுறும் அளவில் ஒரு அமைப்பு வந்துள்ளது கண்டு பெரும் மகிழ்ச்சி.

Share

Leave a Reply