பங்கு சந்தை முதலீடு பற்றிய எனது விருப்பங்கள் நண்பர்கள் பலரும் அறிந்ததே. இது நாள் வரையிலும் வரைபட வாயிலான கணிப்புகளை அடிப்படையாக கொண்டு முதலீட்டு வாய்ப்புகளை முடிவெடுத்து வந்தேன். இந்த துறையின் முதன்மை முறையான நிறுவனங்களின் வரவு-செலவு நிதியறிக்கை அடிப்படையிலான தகவல்கள் திரட்டு மற்றும் ஆராய்ச்சியின் வாயிலாக முதலீட்டு வாய்ப்புகளை முடிவெடுப்பது என்பதான நிலைப்பாடு எடுத்துள்ளமையின் காரணமாக அதற்க்கான தரவுகளை திரட்டி தரவுதளமாக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். நேற்றிலிருந்து துவங்கி செய்து வருகிறேன். முன்னரே வரைபட அடிப்படையிலான தரவு அலசல்களுக்காக தரவுதளம் உருவாக்கி, மேம்படுத்தி வந்துள்ள அனுபவத்தின் காரணமாக இப்போது துவக்கியுள்ள முயற்ச்சியானது குறைந்தது ஒரு வாரம், 10நாட்கள் என்ற அளவில் எனது முழுமையான நேரத்தை உறிஞ்சி கொண்டு விடும் என்று எதிர்நோக்குகிறேன்.
இருப்பினும் இந்த தரவுதளத்தின் மூலமாக எண்ணற்ற பலன்கள் இருக்கும் என்பது அனுபவ ரீதியில் உணர்ந்துள்ளதால் சேகரித்தே ஆக வேண்டியுள்ளது. என்ன வரைபட ரீதியிலான தரவு திரட்டிற்க்கு சம்பந்த பட்ட சந்தையின் இணைய தளங்களே தொகுத்து அப்படியே உள்எடுத்து கொள்ளும் வகையில் ஒழுங்கமைத்து கொடுக்க படுகிறது. ஆனால் நிறுவனங்களின் நிதியறிக்கைகள் ஒவ்வொன்றும் மனித யத்தனத்தால் மட்டுமே சேகரிக்க பட வேண்டியுள்ளது. இந்த பணி முடியும் வரையிலும் வேறெந்த இடுகைகளும் எழுதுவதாக இல்லை.
உழைப்பின்றி வாரா உயர்வு என்பார்கள். நானும் சோதிட வல்லுனர்களிடம் தீர விசாரித்து விட்டேன்.. இப்போதைக்கு எனக்கு சுக்ர தசை வாய்ப்புகள் இல்லையாம். எனவே நானே உழைத்து, நானே உயர்ந்துக்க வேண்டியது தான். வேறு வழியில்லையாம்.. 🙂 🙂
Leave a Reply