பங்கு சந்தை வணிகம் பற்றி அவ்வப்போது எழுதிட உத்தேசம். தலைப்பு பங்கு வணிகம் மற்றும் அன்றைய தேதியினை கொண்டதாக அமையும்.
ஒன்று முந்தைய தினம் நடந்த நிலவரங்கள் பற்றியோ அல்லது அடுத்து வரும் என்ன நடக்க கூடும் என்ற கணிப்புகளையும் கொடுப்பதாக அமையும். தவிரவும் பல்வேறு வர்த்தக செய்திகளும், கருத்துகளுமாக வரக்கூடும்.
முக்கியமாக நான் கூற நினைப்பது பங்கு சந்தை வணிகம் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன. வெறுமே பார்வையாளனாக இருந்த நான் ஒரு காலகட்டத்தில் அதை முறையாக கற்க முனைந்தேன். முதலீடு செய்து கையை சுட்டு கொள்ள விரும்பாது வெறுமே ஏட்டு சுரைக்கையாக பயிற்சி எடுக்க முனைந்தேன். எனவே அந்த முயற்ச்சியில் பெற்ற அனுபவங்கள் வரும். அதில் பெற்ற பயிற்ச்சியின் காரணமாக நானே சில நயா பைசாக்கள் அளவில் முதலீடு செய்து வணிகம் செய்ய களமிறங்கியுள்ளேன். இன்று தான் அந்த உள்நுழைவு பணிகள் நிறைவு பெற்றன. உலகறிந்த ரகசியமாக ஒன்றை கூறி விடுகிறேன்.. எனது முதலீட்டு நயா பைசாவின் இன்றைய அளவு ரூ.2000/- மாகும். இது காலப்போக்கில் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ படக்கூடும்.
சரி எல்லா அலுவலக பணிகளும் பூர்த்தியாகி விட்டனவே நானும் ஏதேனும் வாங்கலாம் என்று முனைந்தால் இன்று பூரம் நட்சத்திரம் அதனால் அது ஆகாது, இது ஆகாது என்று குறுக்கே படுத்து என்னை தடுத்து விட்டார். நாளை அஷ்டமி, நவமி, இந்திய தேர்தல் விடுமுறை என தாண்டி வரும் வெள்ளியன்று தான் களமிறங்க அனுமதி கொடுத்துள்ளார். இது சம்பந்த பட்ட சாதனைகளும், வேதனைகளும் தம்பட்டமாகவும், கண்ணீர் கடலாகவும் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
பயிற்சி வணிகத்தை http://anusishares.blogspot.in/ என்ற சுட்டியில் பின்தொடரலாம். இதனை பற்றியே இன்று விவரித்து விடுவது வரும் நாட்களில் மேற்கொண்டு சொல்ல எளிமையாக இருக்கும். பங்கு வணிகத்தை சந்தை நடைபெறும் போது கணிணி திரையின் முன்அமர்ந்து கொண்டு வாங்க விற்க செய்வார்கள். எனக்கோ சில கட்டுபாடுகள் அல்லது தடைகள் உள்ளன.
- நான் வேறு தொழிலினை முதன்மையாக கொண்டவன். எனவே பகலில் சந்தையினுள் நுழைந்து பார்த்தால் எனது முதன்மை தொழில் பாதிக்க பட கூடும்.
- சந்தையின் போக்கின் போது உடனடியாக முடிவெடுத்து வணிகம் செய்வது எனது மனோபாவத்திற்கு ஒத்துவராத ஒன்றாக கருதினேன். காரணம் நாம் ஒரு நிறுவன பங்கை ஆராயும் போது மற்ற நிறைய நிறுவனங்களை தவற விட்டு விடுகிறோம்.
- எனவே சந்தை துவங்கும் தினம் காலை 8.00 மணிக்கு அன்றைக்கு வாங்க, விற்க வேண்டியவைகள் பற்றிய முடிவுகளை நான் செய்து விட வேண்டும். அதற்க்கு மேல் சந்தை நேரத்தில் எதையும் மாற்ற கூடாது. பொதுவாக இத்தகைய முடிவெடுப்பு பாணியினை EOD – End Of the Day என்பார்கள். அதாவது முடிவடைந்த வணிக தினத்தின் தரவுகளை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுப்பதாகும்.
- ஓன்றாவது பாணியாக வரைபடங்கள் அடிப்படையிலான Technical analysis – In finance, technical analysis is a security analysis methodology for forecasting the direction of prices through the study of past market data, primarily price and volume. – முறையில் எனது முடிவுகளை எடுத்து வணிக பயிற்சி எடுத்து வந்தேன். கற்பனை முதலீடாக ஒரு லட்சம் (ரூ.1,00,000/- ) எடுத்து கொண்டு பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய பத்து நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்ற கட்டுபாட்டினை கொண்டு வணிகம் செய்ய முனைந்தேன். தினமும் மாலையில் கிடைக்கும் தரவுகளை கொண்டு வாங்கியதாகவோ, விற்றதாகவோ கணக்கில் பதிந்து கொண்டேன்.
- இரண்டாவது பாணியாக நிறுவனங்களின் அடிப்படை தரவுகளை கொண்ட Fundamental analysis – Fundamental analysis of a business involves analyzing its financial statements and health, its management and competitive advantages, and its competitors and markets. இதற்க்கும் கற்பனை முதலீடாக ஒரு லட்சம் (ரூ.1,00,000/-) மற்றும் பத்தாயிரம் வீதம் பத்து நிறுவனங்கள் என்பதே விதிமுறையாகும். தினமும் மாலையில் கிடைக்கும் தரவுகளை கொண்டு வாங்கியதாகவோ, விற்றதாகவோ கணக்கில் பதிந்து கொண்டேன்.
முதலாவது பாணியினை August 17th, 2010 ம் வருடம் –புது வியாபாரப் பூசை – துவக்கியது. நான்கு வருடங்களில் இழந்ததும், பெற்றதும் மிக ஏராளம். ஒரு கால கட்டத்தில் நட்டம் தொடர்ந்து கிட்டத்தட்ட ரூ.30,000 இழந்து எனது அசலானது ஒரு லட்சத்திலிருந்து வெறும் எழுபது ஆயிரம் என்ற அளவிற்க்கு சென்று விட்டது. அது வரை சென்ற பின் மீண்டு வந்து 31-03-2014 அன்றைய வருட கணக்கு முடிவில் 1,17,583.39 என்பதாக வந்து நின்றுள்ளது. நட்டங்கள் ஏற்பட்டு முதலீடு குறைந்து எழுபதுஆயிரமாகும் போது நான் ஏழு நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய இயலும். இதனடிப்படையில் பார்த்தால் 1லட்சத்திற்க்கு 30% நட்டம். 70,000 – லிருந்து 1,17,500 என்றால் 68% லாபமாகும். ஆனால் ஒட்டு மொத்தமாக நமது கற்பனை முதலீடான 1லட்சத்திற்க்கு இது வெறும் 17.5% சதவீத லாபமாகும். சாண் ஏறி முழம் சறுக்குவது என்பதற்க்கு எதிராக சாண் சறுக்கி முழம் ஏறியுள்ளேன். நான்கு வருடங்களில் சறுக்கல்கள் வரும் போதெல்லாம் கடுப்பாகி சொல்லாமல் துறவறம் போனது பல முறை. இருந்தாலும் நமக்கு நாமே என்பதா தேற்றி கொண்டு திரும்பி வந்து தொடர்ந்துள்ளேன்.
இரண்டாவது பாணியினை கடந்த 01-04-2014 முதலே துவக்கியுள்ளேன். ஆனால் நான்கு வருடமாக நான் எடுத்த முதல் பாணி பயிற்சிகள் அளிக்காத தைரியத்தை இந்த இரண்டாவது பாணியானது ஓரிரு வாரங்களில் அளித்து விட்டது. இதன் பலனே உடனடியாக பங்கு சந்தையில் காசு போட்டு நேரிடை பயிற்சி எடுக்க விண்ணப்பித்து விட்டேன்.
இதற்கும் மேலாக விரித்து எழுதி யாரையும் போரடிக்க வைக்க போவதில்லை. நாளை முதல் வேறு வேறு சுவாரசிய விசயங்களுடன் சந்திக்க முயலுகிறேன்.
Leave a Reply