சந் தை முன்தினம் 100க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டதாக முடிவடைந்து இருந்ததால் இன்று முழுவதும் பெரிய உற்சாகமின்றி லாப பதிவுகளால் மேலேயும் போகாமல், கீழேயும் போகாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இதனை அரைத்து கொண்டே இருந்தது என்றும் கூறுவார்கள்.
நேற்று PFS (PTC India Financial Services Limited) நிறுவனத்தின் பங்கினை ரூ14.65 என்ற விலையில் 683 பங்குகள் வாங்கியிருந்தேன். இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை நன்றாக இருந்தமையினால் இதனை கடந்த சில காலமாக கவனித்து வந்தேன். தற்போது இது கனிந்து விலையுயரக் கூடிய சூழல் வந்து விட்டதால் வாங்கினேன். வாங்கிய தினத்திலேயே விலை உயர்ந்து முடிந்தது. அடுத்த நாளான இன்றும் உயர்ந்தது.10% லாபம் வைத்து 16.10 க்கு வாங்கிய பங்குகளில் மூன்றிலொரு பாகமான 228 னை விற்று விட்டேன். அடுத்த ஒரு பாகத்தை விற்க 15% சதவீதமான ரூ16.85 க்காக காத்திருக்கேன். ஏப்ரல் 30ம் தேதி இந்நிறுவனத்தின் நிதிநிலை அறிவிப்பு வெளி வரப்போகிறது என்பதால் மூன்றாம் பாகத்திற்க்கு விலை வைக்க வில்லை. வரும் நாட்களை பொறுத்து முடிவு செய்வோம்.
நாளை இன்னமும் விரிவான கட்டுரையுடன் சந்திக்கலாம்.
Leave a Reply