புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

முதல் – லாபம்

​நேற்று (23-05-2014) கிட்டதட்ட 10-12 வருடங்களுக்கு பின்னதாக மீண்டும் ஒரு புதிய ​தொழிலில் முதன் மு​றையாக ரூ.240/- லாபம் ஈட்டியுள்​ளேன் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும். அப்படி​யெனில் இத்த​னை வருடமாக நட்டமா என்று ​கேட்க கூடாது. துணி ஏற்றுமதி ​தொழிலில் இருந்து கணிணி ​மென்​பொருள் து​றையினுள் நு​ழைந்த ​போது ​பெற்ற முதல் வருவாய் என்பது இன்றும் நீங்காது நி​னைவில் இருக்கிறது. அதன் பின்னர் பல்​வேறு ​தொழில் மு​னைப்புகளாக இ​ணைய வணிகம், சிலவ​கையான இ​ணைய தள ரீதியிலான ​சே​வை என்று எனது உ​ழைப்பி​னை​யோ அல்லது முதலீட்​டி​னை​யோ ​கோரிய​வைகளில் இருந்து வரவி​னை​யே காண இயலவில்​லை. வரவு என்பதற்கும் லாபம் என்பதற்கும் ​வெவ்​வேறு வித்தியாசம் இருப்ப​தை உணர்வது அவசியம். சில ​தொழில் மு​னைப்புகள் நீண்ட கால முதலீட்டி​னை ​கோரிய​தோ ஒழிய அதலிருந்து நாம் வருவாய் ​பெறக்கூடிய கால அளவி​னை சற்றும் கணிக்க இயலவில்​லை.

அ​தே சமயம் இந்த ​தொழிலில் நட்டம் வராதா என்ற ​கேள்வியும் ​வேறு ஒருவர் ​கேட்டார். ​மென்​பொருள் ​தொழில் நட்டம் வரதா… நம்​மை ​வே​லை ​செய்ய ​சொல்லி விட்டு முன்பணம் ​கொடுக்காத சூழலில் ஒட்டு ​மொத்த பணியி​னை​யே இரத்து ​செய்வது, மென்​பொரு​ளை வாங்கி பயன்படுத்தி ​கொண்டு நமக்கு பாக்கியி​னை ​கொடுக்காமல் அல்வா ​கொடுப்பது, சில நிறுவனங்களுக்கு ​வே​லையில்லாத சூழலில் வாட​​கை, சம்பளம், பாராமரிப்பு ​செலவு தாங்காமல் ​போதல். இப்படி எந்த​​வொரு முயற்சியிலும் ​வெற்றி, ​தோல்வி என்பது சரி சம​மே. எனக்​கென்ன​வோ முற்காலத்தில் என் தந்​தையார் நடத்தி நான் அனுபவபட்ட நிதி சம்பந்தபட்ட து​றை ​போல எனக்கான து​றையாக கருத இயலுகிறது.

நான் எனது பலவீனமான பகுதியாக கருதுவது மக்க​ளை கவர்ந்து சந்​தையிடல் பகுதியாகும். அத்​த​கைய ​தே​வை இந்த ​தொழில் ​தே​வையில்​லை என்ப​தே மிகப் ​பெரிய ஆறுதல். எந்தளவு உ​ழைத்து நல்முதலீட்டு வாய்ப்பி​னை கண்டறிகி​றோ​மோ அந்தளவு நமக்கு லாபம் வரகூடும். மற்றபடி ஊழியர்கள், உள்கட்ட​மைப்பு வசதிகள் என்ற இன்ன பிற ​செலவுகள் இன்றி ​வெகு ​தொ​லைவுக்கு நம்மால் ​கொண்டு ​செலுத்த இயலகூடியதாக உள்ளது. ​மென்​பொருள் து​றையில் ஒவ்​வொரு த​லையி​னை அதிகரிக்க அதிகரிக்க உள்கட்ட​மைப்பு மற்றும் பராமரிப்பு ​செலவுகள் அதிகரிக்கும். அந்தளவு நமக்கு ​​வே​லைகள் அதிகரிக்க ​வேண்டும். இல்லாது ​போனல் உதாரணமாக ஒரு 10ஊழியர்கள் உள்ள கட்ட​மைப்பி​னை ​வைத்து ​கொண்டு நாம் ஓரிரு மாதம் தக்க ​வே​லையின்றி இருப்பின் நமது முதலீடு என்பது அவ்வளவு தான். எந்த ​தொழிலிலும் நல்லதும், ​கெட்டதும் ​சேர்ந்​தே இருக்கும். பங்கு முதலீடுகளிலும் எதிர்ம​றை கருத்துண்டு. அ​தை பின்​னொரு சமயம் பார்ப்​போம். ​வெறும் ரூ.240 க்கு இம்மாம் ​பெரிய கட்டு​ரையா என்ற ​கேள்வி உங்களுக்குள் வரும் எனில் யாருக்கு​மே நாம் ​பெறும் முதல் அனுபவ​மே மிக முக்கியமான ஒன்றாகும். சரி என்ன நடந்துள்ளது என்ப​தை காண்​போம்.

முந்​தைய கட்டு​ரை ஒன்றில் (பங்குவணிகம் – 25/04/2014) –  Rain Industries என்ற நிறுவனத்தின் பங்கு வாங்கிய​தை பற்றி கூறியிருந்​தேன். வி​லை ரூ.41.65 என்ற ரீதியில் 48 பங்குகள் வாங்கியிருந்​தேன். நான் இத​னை நிறுவனத்தின் வரவு,​செலவு ​போன்ற அடிப்ப​டை காரணிகள்(fundamentals) முன்னிட்டு ​தெரிவு ​செய்திருந்​தேன். அ​தே சமயம் இதன் ​தொழில்நுட்ப காரணிக​ளை (technical analysis) கவனிக்கவில்​லை. வாங்கிய அன்​றே இதன் வி​லை சரிந்து விட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் புகழ்​பெற்ற பன்னாட்டு நிதிநிறுவனம் (​மெரில் லிரிஞ்) தன்னு​டைய 1,42,16,260 -எண்ணிக்​கையிலான 8சதவீத பங்​கை ரூ35 என்ற வி​லைக்கு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு விற்று விட்டது. சந்​தையில் ​வெளிநாட்டுக்கார ​னே விற்று விட்டான். அப்படி​யெனில் நிறுவனம் சரியில்​லை என்ற ஓலம். ஆனால் அந்த சமயத்திலும் ஓரிருவர் அட அவனுக்கு என்ன ​தே​வை​யோ அவசரத்துக்கு வித்திருப்பான் என்றும் ​பேசினார்கள். நிறுவனத்தின் வரவு,​ செலவு நிதிநி​லையறிக்​கை​யை கவனியுங்கள் என்று ஓரிருவர் மட்டு​மே ​பேசினார்கள். மற்ற அ​னைவரு​மே அவ்வளவுதான் கம்​பேனி கு​ளோஸ் என்று பரபரத்தார்கள். ரூபாய் 30.60 என்ற அளவிற்க்கு அடித்து ​நொறுக்க பட்டது. பின்னர் அ​னைவருக்கும் மயக்கம் ​தெளிந்து அடடா இம்புட்டு நல்ல கம்​​பேனி​யை தப்பா நி​னைச்சுட்​டே​மே என்று பாராட்டி, சீராட்டி தூக்கி ​வைக்க ஆரம்பித்தனர். தூக்கிய தூக்கில் எனது கணிப்பான ரூபாய் 50 ​நோக்கி பாய்ந்தது. நான் ரூ.46.65 (12% லாபம்) என்ற அளவில் ​வெளி​யேற முன்னதாக​வே முடிவு ​செய்திருந்​தேன். அதனால் ​வெளி​யேறி விட்​டேன். நமது வி​லையி​னையும் தாண்டி 48.90 என்பதாக ​​மே​லே ​சென்று உச்ச கட்டுபாட்டு வி​லையளவி​னை (up-side freeze) அ​டைந்து நின்றது. இதன் அர்த்தம் யா​தெனில் இதற்க்கு ​மேல் இன்​றைக்கு – 20% – வி​லையுயர்வி​னை சந்​தை அனுமதிக்காது. இந்த நி​லையில் பங்கி​னை வாங்க மட்டு​மே ஆட்கள் இருப்பார்கள் யாரும் விற்க முன்வர மாட்டார்கள். நமது முதலீடான ரூ.2000 க்கு ரூ.240 என்பது 12% லாபமாக்கும் என்பது கவனிக்க தக்கது.

          அடுத்ததாக ​வெறு​மே ​தொழில்நுட்ப காரணிக​ளை மட்டு​மே ​வைத்து ஒரு நிறுவன பங்கி​னை வாங்க முயலுகி​றேன். ரூபாய் 20/- என்ற அளவில் உள்ள அது நமக்கு லாபத்​தை ஈட்டி தர ​போகிறதா அல்லது முதல்-நட்டம் என்ற கட்டு​ரைக்கு தூண்டுகிறதா என்ப​தை இனி வரும் காலங்களில் ​பொறுத்திருந்து கா​ண்​​போமாக..

Share

1 comment to முதல் – லாபம்

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>