கடந்த சில நாட்களாக பங்கு சந்தை ஏற்றம் கண்ட வண்ணம் புதிய உச்ச அளவுகளை கடந்து வருகிறது. இதில் என்னுடைய நயா பைசா (ரூ.2000/-) முதலீட்டு வணிகத்தின் போக்கினை பற்றி பார்ப்போம்.. முன்னதாக மே-27ம் தேதி FINANCIAL TECHNOLOGY என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ஜூன் 4ம் தேதி விற்று விட்டு வெளியேறினேன். இதில் 5சதவீத லாபமே. செய்கூலி, சேதரம் எல்லாம் போக 3-3.5சதம் நமக்கு நிற்க கூடும்.
27-05-2014 + 8 FINANCIAL TECHNOLOGY 256.50
04-06-2014 – 8 FINANCIAL TECHNOLOGY 269.30
கடந்த 05ம் தேதி RADICO KHAIT என்ற நிறுவன பங்கினை ரூ.107.45 க்கு வாங்கினேன். 09ம் தேதி ரூ.119.90 க்கு விற்று விட்டேன். கிட்டதட்ட 12சதம் லாபம். செய்கூலி, சேதாரங்கள் போக நமக்கு முழுமையான 10சதம் லாபம் நிற்கும்.
05-06-2014 + 20 RADICO KHAIT 107.45
09-06-2014 – 20 RADICO KHAIT 119.90
இதனிடையே நான் இந்த பங்கு வர்த்தக கணக்கை துவக்கும் போது ஆயிரம் ரூபாய் கட்டணங்கள் என்பதாக கொடுத்திருந்தேன். அதில் ரூ.500 தான் கட்டணம் என்று கணக்கிட பட்டு ரூ.500 மிச்சம் நின்றது. தவிர முதலீடாக ரூ,2000 என்று போட்டு இருந்ததால் என் கணக்கில் ரூ.2500 பாக்கி இருப்பாக காட்ட பட்டு கொண்டே வருகிறது. எனவே அந்த ரூ.500 -யும் சேர்த்து கொண்டு நமது முதலீட்டு தொகையை ரூ.2000 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி கொண்டு விட்டேன். இப்படி செய்யாவிடில் உண்மையான கணக்கிற்கும், நம் முதலீட்டு கணக்கீடுகளுக்கும் வித்தியாசங்கள் வரும்.
அருமை. பங்கு வர்த்தகம் செழிக்க வாழ்த்துக்கள்.
கூடவே வேர்டுபிரசு பார் வரவைக்கவும் வாழ்த்துக்கள்