இன்றைக்கு சந்தை சிறிதே சிறிது திருத்தம் கண்டது. யாருக்காவது வலித்து விட்டால் என்னாவது என்று மயிலிறகால் தடவி கொடுப்பது போல திருத்தம் நடந்தேறியது.
நமது வணிகத்தில் நேற்று 09ம் தேதி AMTEKINDIA நிறுவனத்தின் பங்குகளை ரூ.79.40 என்ற மதிப்பில் வாங்கியிருந்தேன். இன்றைக்கு 10ம் தேதி ரூ.89.00 க்கு விற்று விட்டேன்.
09-06-2014 + 32 AMTEKINDIA 79.40
10-06-2014 – 32 AMTEKINDIA 89.00
கிட்டதட்ட 12 சதவீத லாபம். செய்கூலி, சேதாரம் எல்லாம் போகவும் 11சதம் நமக்கு நிற்கும். இதில் சுவாரசியமான இரு தகவல்கள் வரலாற்று குறிப்புகாக இங்கே பகிருகிறேன். 1.இந்த பங்கினை சுட்டிகாட்டியது நண்பர் சரவணன். 2.அவர் வெறும் 3ரூ லாபத்தில் வெளியேற சொல்லிவிட்டார். ஆனால் நான் இது ரூ.100 வரை
கட்டாயம் செல்லும் என்று moneycontrol தளத்தின் மன்றத்தில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன். அதே போல இன்று ரூ.100.60 என்ற அளவு சென்று முடிந்து upward breeze என்பதாக முடிந்தது. ஆனால் எனக்கோ நமது இப்போதைய குறிக்கோள் 10 சதம் லாபம் என்பதே என்பதால் நமது லாபத்தை காலை சந்தையின் துவக்கத்திலேயே பதிவு செய்து கொண்டு வெளியேறி விட்டேன். ரூ.100 வரை காத்திருந்தால் 25சத லாபம் என்பதாக அமைந்திருக்கும். இருப்பதை வைத்து மகிழ்வதே மனசுக்கு நல்லது.இதை இங்கு முக்கியமாக எழுத காரணம் நான் ஆதார பூர்வமாக பதிவு செய்திருப்பதால் தான். (பைய புள்ளை இங்கிலிபீசுலே கருத்து கந்தசாமியா எழுதியதாக்கும்.. 🙂 🙂 )
நமது முதலீடான ரூ.2500 க்கு மூன்றிலொரு பாகம் என்பது ரூ.833 ஆகும். இந்த அளவினை எட்டி விட்டோம் என்பதே பிரமிக்க வைக்கிறது. மூன்று வணிகம் 10சதவீதத்திற்கும் மேலாக லாபம் கொடுத்தது. ஒரு முறை 4-5 சதம் லாபம் கொடுத்தது. எனவே 33% வளர்த்து விட்டோம் என்பது வியப்பாக உள்ளது. இத்தனைக்கும் முதலிரு முறையும் ரூ.2000 முதலீட்டினை வைத்து வணிகம் செய்தது. என்றைக்கு இதற்கெல்லாம் சேர்த்து வட்டியும், முதலுமாக நட்ட கணக்கு எழுதுவோம் என்பதை காலம் தான் பதில் சொல்லனும். நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக.
கோவை சென்னை உள்ளுர் நிறுவன பங்குகள் எப்படிப் போகின்றன?
Sir,
Can you recommend some shares for me, I am new to the market.
I will be happy if you reply to my mail.
Thanks
Dharma
Sir,
Can you recommend some shares for me, I am new to the market.
I will be happy if you reply to my mail.
Thanks
Dharma
அன்பின் தர்மா,
தங்கள் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
>>Can you recommend some shares for me, I am new to the market.
அடிப்படையில் நான் ஒரு முதலீட்டாளரே அன்றி முதலீட்டு ஆலோசகர் அல்ல. உங்களுக்கு தொழில்முறை ஆலோசனை தேவை எனில் நண்பர் திரு.சரவணகுமார் அவர்களை சிபாரிசு செய்கிறேன். இவருடைய தளம் http://www.invest2market.com ஆகும். தொடர்பு எண் : 8754272322
என்னிடமிருந்தே தான் தேவையெனில் தனியே மடலில் தொடர்பு கொள்ளவும். நான் தொழில் முறை ஆலோசகர் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும்.
-சிவா