சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதன் நினைவு தினம் முன்னிட்டு இன்றைக்கு ஒரு கட்டுரையை குழுமத்தினுள் படிக்க நேர்ந்தது. அதன் மூலச்சுட்டி..
http://senkottaisriram.blogspot.in/2012/08/blog-post.html?m=1
.. இதில் கவனிக்க வேண்டிய விசயம்…
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்…. இப்படியாகப் பேச்சு போனது.
… சரி இதைபற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள இணைய பெருவெளியில் தேடினேன். தமிழ் விக்கியில் பின்வருமாறு கண்டேன்…
வாஞ்சிநாதன்
http://ta.wikipedia.org/s/1b5
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.
… சரி இதில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் என்பதை அறிந்தவாறே ஆங்கில விக்கியில் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்க்க போனால்…
http://en.wikipedia.org/wiki/Vanchinathan
Vanchinathan was born in 1886 in Shenkottai to Raghupathy Iyer and Rukmani Ammal. His actual name was Shankaran. He did his schooling in Shenkottai and graduated in M.A. from Moolam Thirunal Maharaja College in Thiruvananthapuram. Even while in college, he married Ponnammal and got into a lucrative Government job.
… முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்று உள்ளது. எது தான் உண்மையான வரலாறு என்று பெருங்குழப்பமாக உள்ளது.
ஏதோ படிப்பாளிக மேட்ரு