நட்புகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..!!
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
இந்த வருடம் வழமையான நடைமுறைகளை தாண்டி பிரதமர் திரு.மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்பின்றி பொதுமக்களுக்கு உரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க தொண்டாற்றுவார் என்றே எதிர்பார்ப்போம். இந்தியாவினை உற்பத்தி மையமாக (production hub) பயன்படுத்தி கொள்ள உலக நாடுகளை கேட்டு கொண்டுள்ளார். அதே போல தெற்காசிய நாடுகள் தம்மிடையே அமைதியினை பராமரித்தால் (சார்க்) நிறைய வளர்ச்சியினை எட்ட முடியும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
எனது பள்ளி பருவ வாழ்நாள் முடிந்த பின் இன்று தான் சுதந்திர தினம் அதுவுமாக பள்ளிக்கு சென்று இருந்தேன்.முன்னாள் மாணவர் மன்றம் போல பத்தாம் (10-ம்) வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக கூடிட பேசி வைத்து ஒருங்கிணைந்தோம். 20பேர் வந்திருந்தனர். இன்னமும் 100 பேர் வரவேண்டும். மற்றபடி வரஇயலவில்லை என்று அடுத்த சந்திப்பிற்க்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தவர்கள் ஒரு 30 பேர். ஆக மொத்தம் 50பேர் தொடர்பில் வந்தாச்சு.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
பள்ளியில் சுதந்திர தின கொடியேற்று தினவிழா நடைபெற்று கொண்டிருந்தது. கொடியேற்று வைபவம் முடிந்த பின் தலைமையாசிரியரை சந்தித்து பேசினோம். அவர் அன்புடன் வரவேற்று உபசரித்து தேநீர் போன்றவைகளை அளித்து எங்களை சிறப்பித்தார். பள்ளிக்காக ஏதேனும் உருப்படியாக ஏதேனும் செய்ய நாங்கள் முயல்வதாக வாக்குறுதி கொடுத்தோம். அவர் நீங்கள் எல்லாம் இப்படி ஒன்றினைந்து வந்ததே மிகவும் மகிழ்ச்சி என்று நிறுத்தி கொண்டு விட்டார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
பின்னர் நண்பர்களுடனான மலரும் நினைவுகள் தொடர்ந்தது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்க்கு ஏற்ப அன்றைக்கு இருந்தவர்கள் பெரும்பாலும் சற்று கூட மாறவில்லை என்பதே உண்மை. தவிரவும் வந்திருந்த அனைவரும் அன்புடன் அன்று போலவே வாடா, போடா என்று சகஜமாக இருந்தார்கள். இன்னமும் விடுபட்டு போன பலரும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்
நல்லதுங்கோ.
உறுதி கொடுத்த பலபேரை தலைமை ஆசிரியர் பார்த்திருப்பார்.
என்றாலும், ஒன்றிணைந்து சென்றதே நல்ல விசியம்.
‘பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை’ உங்களை சுதந்திரத் திருநாளில் ஒன்றிணைத்துள்ளாள்.