நண்பர் பழைமைபேசி அவர்களின் ஊர்ப் பழமை நூல் வெளியீட்டு விழா நேற்று கோவை புரந்தர தாசர் சபா மண்டபத்தில் நடைபெற்றது. ரூ.150/- விலையும் 317 பக்கங்களாகவும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. அருட்சுடர் பதிப்பகம் (60,கண்ணகி வீதி, ஈரோடு – 638001 அலைபேசி 9894717185 ) அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

பழமைபேசி எனும் மெளன.மணிவாசகம்
தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வந்த கொங்கு நாட்டுப் புற சொல்வழக்குகள் குறித்தவைகளை தொகுத்து அளித்துள்ளார் பழமைபேசி எனும் மெளன.மணிவாசகம். சாதரணமாக உள்ளூரிலிருந்து கொண்டு ஓய்வு பெற்றவர்கள் எழுதக் கூடிய தலைப்பில் இவர் ஆர்வம் கொண்டு எழுதியது சிறப்பு என்று பலரும் மேடையில் பேசியது உண்மையே.
விழாவிற்க்கு ஊராரும், உறவினரும், இணைய நண்பர்களும் என்று கூட்டம் நிறைவாய் இருந்தது. பேரூர் ஆதினம் திரு.மருதாசல அடிகளார், ராம்ராஜ் வேட்டிகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ், தமிழமணம் காசிஆறுமுகம் போன்றோர் கலந்து கொண்டனர். பதிப்பாளர் திரு.தங்க.விசுவநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நம் பதிவுலக நண்பர்களான சஞ்செய், வானம்பாடிகள் பாலா, வெயிலோன் போன்றோர்கள் புத்தகம் குறித்து பேசினார்கள். பழமைபேசியின் பள்ளி ஆசிரியர்கள் திரு.சுப்பிரமணி, திருமதி. இந்திராணி இருவரும் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதாக பெருமிதத்துடன் பேசினார்கள. பார்வையாளர்கள் பெரும்பான்மையினர் கடைசிவரை இருந்தனர்.
பதிவர்கள் சந்திப்பும் முன்னதாகவே நடைபெறும் என்று ஏற்பாடு செய்ய பட்டிருந்ததால் கோவை, திருப்பூர்,ஈரோடு மாவட்ட பதிவுலக நண்பர்கள் திரளென கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் பட்டியலை ஈரோடு கதிர் அவர்கள் பின்வருமாறு தொகுத்துள்ளார்…
தமிழ்மணம் காசி, லதானந்த, வானம்பாடிகள் பாலா, க.பாலாசி, சஞ்சய் காந்தி, முனைவர் கந்தசாமி, தாராபுரத்தான், வெயிலான் ரமேஷ், தமிழ்பயணி சிவா, மஞ்சூர் ராசா, வின்சண்ட், பால கணேஷ், மயில் விஜி, தாரணிப்பிரியா, வீட்டுப்புறா சக்தி, லலிதா முரளி, ஈரோடு கார்த்திக், வடகரை வேலன், செந்தில் நாதன், ராமன் குட்டி, நிகழ்காலத்தில் சிவா, நந்தகோபால், பொன். கருணாநிதி, சுப்பையா வாத்தியார் (மன்னிக்கவும் இன்னும் மூன்று பதிவர்கள் பெயரை மறந்துவிட்டேன்).
நண்பர்கள் அவரவர்களை பற்றி அறிமுகம் செய்துக்கும் போது என்னை ஈரோடு கதிர் அவர்கள் படமெடுத்துள்ளார். அவருக்கு நன்றி. இந்த விழா குறித்த மேலதிக ஒளிப்படங்கள் மற்றும் கட்டுரைகள்..
நாம் உரைத்தது….
பழமைபேசியின் நூல் அறிமுக விழாவும் பதிவர் சந்திப்பும்
கூடுதலும் பகிர்தலும்
தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வந்த கொங்கு நாட்டுப் புற சொல்வழக்குகள் குறித்தவைகளை தொகுத்து அளித்துள்ளார் பழமைபேசி எனும் மெளன.மணிவாசகம்.

பழமைபேசி எனும் மெளன.மணிவாசகம்
தொகுப்புக்கு மிக்க நன்றிங்க!!!