உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்.
நீண்டகாலமாக பங்கு சந்தை பற்றியெல்லாம் எழுத, பேசும் போது கணிப்புகளை எல்லாம் முன்னரே சொன்னால் தானே யாருக்கேன் பயன்படும் அல்லது நமது கணிப்பு சரியா தவறா என்று யாரேனும் சோதிக்க இயலும் என்ற கருத்தில் வந்து நின்றது. எப்படி எழுதுவது அல்லது நம்மை பற்றி எங்ஙனம் வெளிப்படுத்தி கொள்வது என்று பல நாட்களாக யோசித்து வந்தது உண்டு. நண்பர் திரு.சரவணன் அவர்கள் இதனையே முழு நேர தொழில்முறையில் செய்து வரும் போது நமது கத்துகுட்டி (amateur) தனமான செயல்கள் தேவையற்றது என்பதும் ஒன்றாகும். இருப்பினும் நமது தவறுகளை கற்று கொள்வது வேறு எங்ஙனம் என்ற சிந்தனையும் வந்தது. எனவே இந்த தீபஒளி திருநாள் அன்று துணிந்து இறங்கியாச்சு.
நாமும் பங்குசந்தை முதலீடுகள் பற்றி கணிப்பினை பற்றி சில காலம் சோதித்து பார்ப்போம் என களமிறங்கியாச்சு. இது எவ்வாறு அமையும் எனில் ரூ.10000/- (பத்தாயிரம்) வீதம் 10(பத்து) விதமான பங்குகளில் முதலீடு செய்வது. இதனை என்றைக்கு முடிவுக்கு கொண்டு வருவது எனில் இரண்டுமடங்கு ஆகும் போது. 10 * 10000 என்பது 20 * 20000 = என்பதாக ரூ.4,00,000/- என்பதாக ரூபாய் நான்கு லட்சத்தை அடைய வேண்டும் அல்லது ஒரு லட்சம் என்னும் முதலீடு முற்றிலும் அழியும் வரை 0.05பைசா வரையிலும். இங்கு வாங்க, விற்க நடக்கு எதற்கும் தரகு, வரி போன்றவைகள் கணக்கிட பட போவதில்லை. stop loss எனும் நமது வெளியேறும் அளவானது தினமும் மாற்றியமைக்க பட்டு கொண்டே இருக்கும். தளத்தின் பங்குமுதலீடு/portfolio என்னும் பக்கத்தில் கோப்பு வடிவில் அனைத்து வரவு, செலவுகளும் குறிக்க பட்டு கொண்டு வரும். முதலில் நாளை வாங்க, விற்க போவது பற்றிய குறிப்பினை அங்கேயே வெளியிடபடும். பின்னரே கட்டுரை வடிவில் இடுகைகளாக பொறுமையாக இங்கே வெளியிடபடும். இது சந்தையில் நமது கணிப்புகளின் விளைவை காண விரும்புவோர்க்கு உபயோகமாக இருக்கும்.
இன்றைய சந்தையின் முடிவின் அடிப்படையில் நாளை வாங்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
+ 240 ARVINDREM 41.60 46.20 39.95
+ 35 CAIRN 288.85 320.65 272.60
… இவைகள் நாம் குறிபிடும் விலைக்கு கிடைக்கிறதா என்பதை நாளைய சந்தையில் காண்போமாக.
Dear Siva,
Congratulation to your new trail portfolio….
your first trade have done cairn bought at your prescribed rate.. 🙂