சந்தையின் திறப்பு விலையில் விற்க முடிவு செய்திருந்த CAIRN , MCLEODRUSS ஆகிய இரண்டும் முறையே 276.00 , 258.15 என்ற விலையில் பரிவர்த்தனை நடந்திருந்தது. தவிரவும் நம்மிடமுள்ள மற்றொரு பங்கான AMTEKAUTO விலை குறைந்து நமது நட்ட நிறுத்த(stop loss) விலையான 170.05 விட குறைந்து 165.85 என்ற விலையில் முடிவடைந்துள்ளது. இதனை வரும் 10/11/2014 சந்தையில் விற்று விட்டு வெளியேற வேண்டியது தான். அடுத்த சந்தை வர்த்தக நாளான (10-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை.
பலரும் கடந்த சில நாட்களாக எந்தவொரு பங்கும் வாங்க கூடிய தகுதியில் வரவில்லையா என்று மின்னஞ்சலில் கேட்கிறார்கள். அதே போல இப்படி ஏன் பரிந்துரையை கொடுக்க வேண்டும். எண்ணற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அளிப்பது போல தினசரி tips அல்லது வாராந்திர பரிந்துரை என்பதகா செய்யலாமே என்றும் கேட்கிறார்கள். நமது பதில் அப்படி செய்வது மிக எளிது. அப்படி செய்பவர்களின் வழக்கமான பரிந்துரைகளின் பேரில் மிகப் பெரிய அளவில் பொருளீட்டியவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் மிக சொற்பமாகவே இருக்கிறது. அதே சமயம் பரிந்துரை தருபவர்களின் செயல்திற (performance) அறிக்கையினை பார்த்தால் அவர்களை பின்பற்றி இருந்தால் நமது முதலீடுகள் ஒற்றைக்கு இரட்டை என்பதையெல்லாம் தாண்டி பலமடங்காகி இருக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் பரிந்துரையாளர்களின் செயல்திற அறிக்கை மிக அதிக லாபத்திலும், பின்பற்றும் முதலீட்டாளர்களின் நிலை நட்டத்திலுமாக அமைந்து விடுகிறது.
சொல்ல பட்ட பரிந்துரைகளை முதலீட்டாளர்களால் சரிவர பின்பற்ற இயலாமையே மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. சந்தையில் வாங்க/விற்க தொடர்பு கொள்ள இயலாமல் போய் விடுதல். பரிந்தரையாளர்கள் கொடுக்கும் அனைத்தையும் பின்பற்ற வேண்டிய அளவுக்கு பெரிய அளவிலான முதலீடு இல்லாது போதால். பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றாமல் தத்தமது யூகங்களை பரிந்துரைகளின் ஊடாக பரிசோதித்து பார்த்தல் என்று பல்வேறு காரணங்கள் அடுக்கலாம்.
இதன் காரணமாகவே பரிந்துரையாளர்கள் பாணியினை விடுத்து நாம் ஒரு முதலீட்டாளராக/நிதிமேலாளாராக இருந்தால் என்ன செய்ய இயலுமோ அதையே இங்கே பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஒரு நல்ல முதலீட்டாளராக/நிதிமேலாளாராக இருந்தால் சந்தை வரலாற்று உச்சத்தில் இருக்கும் போது முழு முதலீட்டினையும் பங்குகளில் குவிப்பது நல்ல செயலாக இருக்காது. மூன்றிலொரு பங்கு (1/3) அல்லது பாதியளவு1/2) என்பதை தாண்ட வேண்டுமெனில் நாம் வாங்கியுள்ள மற்ற பங்குகள் லாப நிலைக்கு வந்தால் மட்டுமே முன்னேற இயலும். அப்படி அமையாத சூழலில் தக்க வாய்ப்பிற்காக காத்திருப்பதே நலம்.
வாய்ப்பான பங்குகள் வந்தாலும் ஏற்கனவே நம்மிடையே உள்ள பங்குகளின் நிலவரத்தை அனுசரித்தே புதியவைகளில் முதலீடு செய்ய இயலும். முதலீடு செய்ய வாய்ப்புள்ள சில நண்பர்கள் புதிய பங்குகள் பற்றி தனிமடலில் கேட்டு முதலீடு செய்கிறார்கள். அது அவரவர் சூழலை பொறுத்தது.
07-11-2014 சந்தையின் முடிவின் அடிப்படையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க வேண்டிய, விற்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 59 | AMTEKAUTO | 0.00 | 170.05 | 165.85 |
Sell | 15 | CESC | 0.00 | 678.05 | 752.00 |
* 07-11-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -293.75 |
பங்கு முதலீடு | – | -20246.60 |
பங்கு மதிப்பு | – | 20144.90 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 99604.55 |
—————————————— | – | ————— |
AMTEKAUTO பங்கானது 166.05 என்பதாக இன்று திறப்பு விலையாக பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.