இன்றைக்கு விற்க முன்னதாக முடிவெடுத்திருந்த AMTEKAUTO பங்கானது 166.05 என்பதாக சந்தையின் திறப்பு விலையில் பரிவர்தனையாகிருந்தது. நம்மிடம் மீதமிருந்த ஒரே பங்கான CESC யும் இன்று நமது நட்டவிலைக்கு குறைவாக முடிவடைந்துள்ளது. நாளைய சந்தையின் திறப்பின் போது இதனையும் 663.00 என்பதாக விற்று விட்டு வெளியேற வேண்டியது தான். நாளைய சந்தையின் முடிவில் நம் கையில் எந்த பங்கும் கைவசமிருக்காது. தவிரவும் அடுத்த சந்தை வர்த்தக நாளான (11-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை. வெறுமே வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலில் அதனையும் செவ்வனே செய்தல் மிகவும் நல்லது. நமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற பங்குகள் வராது போது அவைகளை துரத்தி செல்லுதல் சரியானதல்ல.
11-11-2014 சந்தையின் முடிவின் அடிப்படையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க வேண்டிய, விற்க வேண்டிய பங்கும், அதன் விலையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 15 | CESC | 0.00 | 678.05 | 663.00 |
CESC பங்கானது இன்று திறப்பு விலையாக 664.00 என்பதாக பரிவர்தனையாகியுள்ளது.
நாம் விற்று விட்டு வெளியேறிய பின்னர் சம்பந்த பட்ட பங்குகளை பற்றி பெரிதும் அக்கறை படுதல் கூடாதுதான் எனினும் நேற்று வெளியேறிய AMTEKAUTO நிறுவன பங்கானது 193.60 29.70 (+18.12%) – என்பதாக அதாவது 193.60 ரூபாய் என்ற அளவில் 18சதவீதம் உயர்ந்து கிட்டதட்ட 30ரூபாய் விலை உயர்வில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நமது இலக்கான 186.35 என்பதனையும் ஒரே தாண்டலாக தாண்டி ஓடிக்கொண்டுள்ளது.
டேக் இட் ஈசி சார்.. ஸ்டாப் லாஸ் இடத்த டிசைட் செய்வதை மட்டும் கொஞ்சம் கேர்புல்லா பண்ணுங்க.. சீக்கிரம் ட்ரிகர் ஆயிடுதுன்னு ஒரு பீலிங்..