நாம் இன்று வாங்க தீர்மானித்திருந்த SBT(State Bank of Travancore) பங்கானது 440.00 என்ற விலைக்கும் கீழாக 439.00 என்ற விலைக்கு நடந்து நமது விலையினை உறுதி செய்து விட்டு மேலே சென்று 445.85 என்ற அளவில் முடிவு விலையாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு NIFTY மீண்டும் ஒரு உச்ச அளவில் 8,383.30 சென்று முடிவடைந்துள்ளது. விரைவில் 8500 என்பதை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கலாம். பிற சந்தைகள் நிலவரம் என்று பார்த்தால் ஜப்பானிய சந்தையான நிக்கி(Nikkei) கடந்த ஏழு வருடங்களுக்கு பிறகு ஒரு மேலான நிலையில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (13-11-2014) சந்தையில் வாங்க SASKEN பங்கு பரிந்துரை செய்ய படுகிறது. அவைகளை வாங்க வேண்டிய விலைகள் குறித்த விவரங்களை பட்டியலில் காண்போமாக…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 23 | SBT | 0.00 | 416.30 | 484.00 |
Buy | 40 | SASKEN | 245.95 | 234.80 | 270.55 |
வணக்கம் ஜி,
தங்களிடம் கேட்க நினைத்த பெரும்பான்மை கேள்விகளுக்கு, நீ குழல் வலைதளத்திலிருந்து காணொளிகளை கண்டு நானே ஓரளவு ஐயம் தெளிந்து கொண்டேன்.
🙂
அதனால் தான் தங்களிடம் ஏதும் கேள்விகள் கேட்கவில்லை.
இப்போது அங்கு பதில் கிடைக்காத ஒரு கேள்வி உங்களிடம்.
இன்று சாஸ்கேன் பங்குகளை வாங்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள். இதை வாங்கலாம் என்று "நீங்கள்" எந்த அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள்?
மகேந்திரன் ஜி,
எந்தவொரு பங்கினை வாங்குவதும் மிகப் பெரும்பாலும் இருவகையில் அடங்குகிறது. முதலாவதாக நிறுவனங்களின் அடிப்படை (fundamental analysis) விவரங்களான லாபம், விற்பனை போன்றவற்றின் அலசல்கள் மூலம் வாங்க படுகின்றன. அடுத்ததாக பங்குகள் சந்தையில் செல்லும் போக்குகளை தரவுகளாக கொண்டு தொழில்நுட்ப (technical analysis) அலசல்கள் முறையாகும். இவ்விரண்டையும் தாண்டிய ஊக செய்திகள், கிசுகிசு, உள்தகவல் என்பவைகளை நாம் இங்கு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.
மேற்குறிப்பிட்ட இரு முறைகளில் நான் இப்போதைக்கு தொழில்நுட்ப அலசல் (technical analysis) முறையினையே பயன்படுத்தியுள்ளேன். இரு வகை அலசல்களிலும் லாபம், நட்டம் வருவது இயற்கையே. தொழில்நுட்ப அலசல் முறையில் வரைபடங்களை வைத்து கொண்டு பேசுவது அடிப்படையான அடையாளமாகும். இந்த வகை அலசலுக்கும் பல்வேறு வகையான சூத்திரங்கள் எனும் கருவிகள் பயன்படுத்த படுகின்றன, RSI, fibonacci, swing என்று கணக்கற்றவைகள் உள்ளன.
நான் தெரிவு செய்யும் விதம் எவ்வாறு என்று கேட்டுள்ளீர்கள். தொழில்நுட்ப அலசல் வகையின் அடிப்படையில் மிக சாதரண ஒரு காரணி (factor) கொண்டும் நான் முடிவெடுத்து வருகிறேன். எனது இந்த முயற்சி லாபகரமாக முன்னேறும் போது விரிவாக விளக்குவது நல்லது. இப்போதைக்கு அந்த முறைகள் பற்றி விளக்குதல் நன்றல்ல. மற்றபடி வரைபடம் பார்த்து பங்குகளை பற்றி உணரக்கூடிய யாவரும் எனது தெரிவு முறையினை எளிதில் எப்படி என்பதை கண்டு கொண்டு விடலாம் என்ற குறிப்பினை இங்கே விட்டு வைக்கிறேன்.. 🙂 🙂
உங்களை போன்றவர்கள் மேலும், மேலும் ஏதேனும் கேள்விகள் கேட்டால் தான் விரிவாக எழுத வசதியாக இருக்கும்…
இன்று நாம் வாங்க விலை குறித்திருந்த SASKEN நிறுவன பங்கானது 245.95 என்ற விலைக்கு கிடைக்க பெற்றுள்ளது.