நாம் இன்று வாங்க தீர்மானித்திருந்த SASKEN(Sasken Communication Technologies) பங்கானது 245.95 என்ற விலைக்கும் கீழாக வர்த்தகமாகி நமக்கு கிடைத்து விட்டு மேலே சென்று 250.30 என்ற அளவில் முடிவு விலையாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கு மத்திய அரசு சுங்க வரி உயர்வை அறிவித்ததால் எண்ணைய் நிறுவன பங்குகள் ஓரளவு பாதிக்க பட்டு ஒட்டு மொத்த NIFTY index ஐயும் சற்றே சரித்து விட்டன. இனி பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வினால் எந்தெந்த நிறுவனங்கள் மறைமுகமாக பாதிக்க படுமோ அவைகள் நாளை சற்றே சுணங்க கூடும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (14-11-2014) சந்தையில் வாங்க எந்த பங்கும் பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க வேண்டிய, விற்க வேண்டிய விலைகள் குறித்த விவரங்களை பட்டியலில் காண்போமாக…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 23 | SBT | 0.00 | 416.30 | 484.00 |
Sell | 40 | SASKEN | 0.0 | 234.80 | 270.55 |
வணக்கம் ஜி,
2003 ல் 3900 என்ற அளவில் இருந்த ப.ச.கு.எண் 2009 ல் 19000 என்ற அளவு வரை சென்றது.
அதே போல் இப்போது 28000 ல் இருக்கும் எண் 2020 ல் 70,000 அளவு வரை செல்லும் என்கிறார் ஒரு நிபுணர்.
உங்கள் கருத்து என்ன?
சாத்தியம் தான் என்றால், ஆறு வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீடாக எந்த பங்குகளை வாங்க நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
மகேந்திரன் ஜி,
வணக்கம்.
2020 -ல் 70,000 வரைக்கும் போகுமா என்பதை யாரும் உறுதியாக சொல்ல இயலாது. ஆனால் சில முன்னோடிகள் நன்றாக செல்லும் என்றே கூறுகிறார்கள். உதாரணமாக ஜின்ஜின்வாலா போன்றவர்களை கூறலாம். பொதுவாக நமது அனுமானம் GDP எனப்படும் வளர்ச்சி விகிதம் 5-6 சதம் என்று செல்லும் போது இந்தியா போன்ற நாடுகளின் சந்தை பாய்சல் நன்றாகவே இருக்கும். பெரிய அளவில் போர் மற்றும் இயற்கை சீற்றங்கள் இல்லாது போனால் ஓரளவு சாத்தியமே. இன்றைய மதிப்பின் இரட்டிப்பாக 50,000 என்பதை எளிதில் கடந்து விடகூடும்.
நீண்டகால முதலீடு என்பது சந்தையின் போக்கை பொறுத்தது அல்ல. நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் அடிப்படை கூறுகளை பொறுத்தது. சந்தையின் மதிப்பு சுணங்கினாலும் பெரிய அளவில் வளர கூடிய தனிப்பட்ட நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன.

இது போன்ற நீண்டகால முதலீட்டிற்கு மேலும் சில விவரங்கள் தேவை படுகிறது. நீங்கள் முதலீடு செய்யபோகும் பணஅளவு கிட்டதட்ட எவ்வளவு பத்தாயிரங்கள், லட்சங்கள், கோடிகள் என்பதாக. தவிரவும் இது உங்கள் முதலீட்டில் எவ்வளவு சதவீதம், உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத துறை போன்ற சில விவரங்கள் தேவை படுகின்றன. கொடுத்தால் சில நாட்களில் எனது சிபாரிசினை கூறுவேன்.
மிக்க நன்றி ஜி.
நீண்ட கால முதலீடாக நல்ல கம்பெனிகளின் பங்குகளில் மூன்று முதல் ஐந்து லட்சம் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.
ஆட்டோமொபைல், பாங்கிங், பார்மா, ஐடி, ஆர்வமுள்ள துறைகள்.
மற்றவை கூடாது என்பதில்லை. அதைப் பற்றிய விபரங்கள் தெரியாது. அதனால் தான்.
ரியல்டர் பேஸ்டு மியுச்சுவல் பண்ட் சரி வருமா?
இன்ட்ராடே அண்ட் ஸ்விங் டிரேடிங் செய்ய தனியே ஒரு ஒரு லட்சம் ஒதுக்கும் திட்டமும் இருக்கிறது.
மகேந்திரன் ஜி,
இது பற்றி விளக்கம் சொல்லும் அளவுக்கு எனக்கு இப்போதைக்கு விவரங்கள் போதாது.
இது பற்றி அலசி ஆராய்ந்து விட்டு அடுத்த வாரத்தில் விரிவாக எழுதுகிறேனுங்க.