புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம்-19/11/2014

SBT நிறுவனம் நமது 10% லாபம் என்ற 384.00 இலக்​கை அ​டைந்து பின்னர் அத​னையும் தாண்டி 501.90 என்ற உயரிய அளவு வ​ரை ​சென்று விட்டு 485.30 என்ற வி​லையி​னை முடிவு வி​லையாக அ​டைந்துள்ளது. நமது இந்த ஒருநிறுவன பங்கு முதலீட்டில் இது 10% லாபமாகும். SASKEN நிறுவனம் 2.65சதவீதம் இறங்கி ரூபாய் 253.45 என்பதாக முடிவ​டைந்துள்ளது. புதியதாக வாங்க வி​லை ​முடிவு ​​செய்திருந்த NDTV பங்கானது நமது வி​லையினும் கீழாக ​சென்று 109.80 என்பதாக வர்த்தம் நடந்திருந்தது.

அடுத்த சந்​தை வர்த்தக நாளான (20-11-2014) சந்​தையில் எந்த நிறுவன பங்கும் வாங்க பங்கு பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…

Buy/Sell Qty Script Buy Rate SL Sell Rate
Sell 40 SASKEN 0.0 245.95 270.55
Sell 90 NDTV 0.00 103.00 122.50

 

Share

7 comments to பங்குவணிகம்-19/11/2014

 • வணக்கம் ஜி,

  1. ஒரு பங்கினை அன்றே வாங்கி அன்றே விற்கும் போது ஏற்படும் செலவு (புரோக்கரேஜ், டாக்சஸ்), மற்றும், அதே பங்கினை நாம் எதிர்பார்க்கும் விலை வரும்வரை பத்துப் பதினைந்து நாட்கள் வைத்திருந்து விற்கும் போது ஏற்படும் செலவு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா?

  2. இளம் வயது பங்கு முதலீட்டாளர்கள் 35% வரை ரிஸ்க் எடுக்கலாம் என்று ஒரு வலைதளத்தில் படித்தேன். ஆனால், அது சரியாக புரியவில்லை. என்ன சொல்ல வருகிறார் அந்த பதிவாளர்? 

 • ம​கேந்திரன் ஜி,

  1. ஒரு பங்கினை அன்றே வாங்கி அன்றே விற்கும் போது ஏற்படும் செலவு (புரோக்கரேஜ், டாக்சஸ்), மற்றும், அதே பங்கினை நாம் எதிர்பார்க்கும் விலை வரும்வரை பத்துப் பதினைந்து நாட்கள் வைத்திருந்து விற்கும் போது ஏற்படும் செலவு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா?

  நிச்சயம் உண்டுங்க.

  அன்றாடம் கணக்​கை முடிக்கும் தினவணிகம் (Intra day) ​செய்ய 0.01% – 0.03% வ​ரை தரகு நிர்ணயம் ​செய்யகிறார்கள். இன்று வாங்கி பின்னாட்களில் (Delivery ) விற்க 0.1% – 0.3% வ​ரையிலும் தரகு நிர்ணயம் ​செய்கிறார்கள். இந்த சதவீதம் தரகர்க​ளை ​பொறுத்து மாறுபடும். உதாரணமாக ரூபாய் ஒரு லட்சதிற்கு தின வணிகம் ​செய்தால் ரூ.20 + ரூ20 என்பதாகவும், இன்று வாங்கி அடுத்த நாட்களில் விற்பதாக இருப்பின் ரூ200 + ரூ200 என்பதாகவும் அ​மையும். வாங்கவும், விற்கவும் இரு மு​றையும் தரகு கணக்கிட படும்.

  ​மேற்குறிபிட்ட இரு மு​றையில் எந்த மு​றையாக இருப்பின் இந்த தரகு கட்டணத்திற்கு 12.5% வரி விதிக்க படும். வரியானது தரகு கட்டண பணம் எவ்வளவு வருகிற​தோ அதற்கு தான். எந்த மு​றை என்பது பற்றியல்ல.

  இவ்விரண்டு தரகு கட்டணம் மற்றும் வரிக​ளை தவிர பின்னாட்களில் விற்கும் மு​றையில் அதிக படியாக ஒரு நிறுவன பங்கிற்கு script charges என்று ​சொல்ல கூடிய உங்கள் பங்கி​னை பராமரிக்க கூடிய DP கட்டணங்கள் வரக்கூடும். இது nsdl.co.in ​போன்ற நிறுவனத்தினரின் கட்டணமாக அ​மையும். சாதரணமாக இது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு ரூபாய் 25 என்பதாக அ​மைய கூடும். கு​றைவாக வாங்குபவர்களும் உண்டு.

 • 2. இளம் வயது பங்கு முதலீட்டாளர்கள் 35% வரை ரிஸ்க் எடுக்கலாம் என்று ஒரு வலைதளத்தில் படித்தேன். ஆனால், அது சரியாக புரியவில்லை. என்ன சொல்ல வருகிறார் அந்த பதிவாளர்? 

  நிதி ஆ​லோசகர்கள் மூன்று விதமாக நம் வயதி​னை பிரித்து ​கொண்டு ஆ​லோச​னை கூறுவார்கள். உதாரணமாக 40வயது வ​ரை இளம் வயது, 40-60வ​ரையிலும் நடுத்தர வயது, 60க்கு ​மே​லே என்பது முதி​​யோர் என கருதலாம். இதில் இளம் வயதில் ஒரு லட்சம் ரூபாய் ​சேமிப்பாக உள்ளவர்கள் பங்கு முதலீட்டில் ரூ35,000/- வ​ரைக்கும் ​முதலீடு ​செய்து துணிகரமாக முயன்று பார்க்கலாம் என்கிறார்கள். இன்​னொரு 35000 அளவிற்கு வங்கி ​வைப்பு நிதி ​போன்று முதலீடு ​செய்ய ​சொல்லுவார்கள்.

  இ​தை தவிர்த்து ​வேறு ஏதும் ​கோணத்தில் ​சொல்லியுள்ளாரா என்பது சம்பந்த பட்ட கட்டு​ரை​யை படித்தால் தான் புரியும்.

 • ஓ! சரி சரி.

  அந்தப் பதிவிலும் கிட்டத்தட்ட இதே கோணத்தில் தான் இருந்தது.

  பங்குச் சந்தை சூதாட்டம் போல்தான். ஒருவேளை நட்டம் ஏற்பட்டாலும் இளவயதில் இருந்தால் மீண்டு வர முடியும். சோ, துணிந்து 35 சதம் வரை ரிஸ்க் எடுக்கலாம் என்று எழுதப் பட்டிருந்தது. 

 • ஜி,

  பேங்கிங்கில் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் என்பதற்கு ரேக்கரிங் டெபாசிட் ஒரு உதாரணம். போலவே, பங்குத்துறையில் S.I.P எப்படி என்பதை ஒரு உதாரணத்தோடு சொல்லுங்களேன்.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>