இன்றைய சந்தையில் கோடாக் மகிந்திரா வங்கி மற்றும் இங்க் வைய்சியா வங்கி இணைப்பு குறித்த செய்தி பரப்பரப்பாக பேசப்பட்டது. இறங்கி வரும் இந்திய ரூபாய் மதிப்பின் காரணமாக ஏற்றுமதி சார்ந்த துறைகளான மென்பொருள், மருத்துவம் போன்ற துறை பங்குகளின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வளர்ச்சி குறைவு மற்றும் சீனாவின் PMI உபயோக சதவீதம் குறைவு போன்ற காரணங்களால் பல்வேறு நாட்டு சந்தைகளும் ஒரு மந்த நிலையிலேயே நடைபெற்றுள்ளன.
SASKEN நிறுவனம் 1.8% உயர்ந்து ரூபாய் 258.10 என்பதாக முடிவடைந்துள்ளது. NDTV பங்கானது 2.2% உயர்ந்து 113.90 என்பதாக முடிவடைந்தது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-11-2014) சந்தையில் ELDERPHARMA நிறுவன பங்கு வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 40 | SASKEN | 0.0 | 245.95 | 270.55 |
Sell | 90 | NDTV | 0.00 | 105.75 | 122.50 |
Buy | 57 | ELDERPHARM | 173.80 | 168.00 | 191.40 |
ELDERPHARMA நிறுவன பங்கு நமது வாங்கும் விலையான ரூ.173.80 கீழாக 173.60 என்பதாக வர்த்தகமாகி கொண்டுள்ளது.