நிப்டி 8530.15 என்றதொரு உயரிய நிலையில் முடிவடைந்துள்ளது. பெரும்பாலோனோர் அடுத்ததாக 9000 என்ற நிலையினை எதிர்நோக்குகிறார்கள். இன்றைய உயர்வுக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தவைகள் என்றால் உலோக துறை பங்குகளே ஆகும். சீனாவின் மத்திய வங்கியானது கடந்த இரு ஆண்டு கால இடைவெளியில் இன்று எதிர்பாரா விதமாக வட்டியினை குறைத்ததால் உலோக துறை எழுச்சியுடன் இருந்தது. மொத்த உலோக நுகர்வில் பாதிக்கும் மேலாக உபயோக படுத்தும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிட தக்கது. Hindalco, Tata Steel மற்றும் Sesa Sterlite போன்ற நிறுவனங்கள் இன்று மிளிர்ந்த நிறுவனங்களில் முக்கியமானது ஆகும்.
SASKEN நிறுவனம் 0.10% சரிந்து ரூபாய் 251.55 என்பதாகவும், NDTV பங்கானது 4.61% உயர்ந்து 119.05 என்பதாகவும், ELDERPHARM நிறுவன பங்கு நமது நட்டவிலையான 168.00 என்பதனினும் கீழாக 167.75 என்பதாக முடிவடைந்தது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (25-11-2014) சந்தையில் ONELIFECAP பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 40 | SASKEN | 0.0 | 245.95 | 270.55 |
Sell | 90 | NDTV | 0.00 | 105.75 | 122.50 |
Sell | 90 | ELDERPHARM | 0.00 | 0.00 | 167.75 |
Buy | 58 | ONELIFECAP | 171.45 | 156.30 | 199.00 |
ELDERPHARM இன்றைக்கு திறப்பு விலை 166.15யாக வர்த்தகமாகியுள்ளது. புதியதாக வாங்க விலை முடிவு செய்திருந்த ONELIFECAP பங்கானது நமது விலையான 171.45 என்பதற்கும் கீழாக 168.90 என்பதாக தற்போது வர்த்தகமாகி வருகிறது.
விற்க விலை சொல்லியிருந்த பங்கான NDTV யானது நமது விலையான 122.50 என்பதையும் தாண்டி 123.00 என்பதாக வர்த்தகமாகி வருகிறது.