குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

ஆடிப்பெருக்கு-நொய்யல் திரும்புமா

இன்றைக்கு ஆடிப்பெருக்கு(ஆடி18). விவசாயம் சம்பந்தபட்டவர்களும், பக்தர்களும் கொண்டாடும் நாள்.  ஆடிப் பட்டம் தேடி வி‍தை என்பதற்க்கு ஏற்ப இந்த வருடம் வெள்ளாமை நன்றே வர வருண பகவானை எதிர் நோக்குவோமாக. காவிரி கரையோற மக்கள் நதியினை கண்ணில் காணும் பாக்கியவான்கள்.

எங்கள் ஊர் நொய்யலில் நீர் இல்லை என்பது செய்தி. எங்கள் ஊரில் நொய்யலே இல்லை என்பது உண்மை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்ய பட்ட போது திடீர் விடுமுறை. என் சித்தப்பாவும், நானும் நொய்யலில் மீன் பிடிக்க சென்றோம். ஆற்றில் நீர் ஓடியது அப்போது.  திடீரென கிடைத்த விடுமுறையை கழிக்க நானும் அவருமாக மீன் பிடிக்க தூண்டில், மண்புழு டப்பாவில், அவர் செய்தி கேட்க கையடக்க வானொலி, கதைப் புத்தகம் என்று ஏதோ கடலில் மீன் பிடிக்க செல்லுவது போல கிளம்பினோம்.

முதலில் அவர் தூண்டில் போட்டு கரையில் காத்திருந்தார். சிறுவனாய் முதலில் தண்ணீரில் விளையாடிய பின் அட நாம புடிக்க வேண்டாமா என்ற எண்ணம். அவரிடம் கெஞ்சி, இரகளை செய்து தூண்டிலை நான் வாங்கிக் கொண்டு அமர்ந்தேன். அவர் இன்னமும் கொஞ்சம் மண் புழு தேடி அப்பக்கம் சென்று விட்டார்.

இன்றைக்கு அனகோண்டா பார்த்து வளருகிறார்கள் குழந்தைகள். அன்றைக்கு பாம்பு என்பது அச்சிடப் பட்டுள்ள பாடப் புத்தகங்களில் மட்டும் காணும் வாய்ப்புண்டு. வேறு விதமாய் காண ஊரில் அடியில் சிக்கும் பாம்புகள் தான். திடீரென தண்ணீரிலிருந்து ஒரு பாம்பு தலையை நீட்டியது. அய்யோ, அம்மா என்று அலறியப் படி தூண்டிலை கைவிட்டு துள்ளி விழுந்தேன்.

நொய்யல் நதி

நொய்யல் நதி - ஒளிப்படம் விக்கிபீடியா

அருகில் இருந்த மற்றவர்கள் என்னவோ ஏதோ என்று வர பாம்பு என்று சொல்லியப் படி நான் இருந்த நிலையை பார்த்து ஏதோ பாம்பு கடி வாங்கியதாகவே எண்ணினார்கள். அதற்க்குள் ஒருவர் தண்ணீர் பாம்பு தான் என்ற உண்மையை போட்டு உடைத்தார். தூண்டில் தண்ணீரில் அடித்துச் செல்லபட்டு விட்டது. தூண்டில் இல்லாது என்ன செய்வது. வரும் வழியில் பிற மீன்பிடி ஆசாமிகளிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு சித்தப்பாவும் நானும் வீடு வந்து சேர்ந்தோம்.

நொய்யலாற்றின் சிறு அணைக் கட்டு

நொய்யலாற்றின் சிறு அணைக் கட்டு - தம்பி கார்த்தி, சித்தப்பா சிவராஜ் மற்றும் நான்.

ஒரு நல்ல மழைக்காலத்தில் எங்கள் ஊர் அணைக் கட்டு நிரம்பி வழிந்த அன்று அதிசய காட்சியை காண சென்று எடுத்த ஒளிப்படம். இன்றைக்கு நொய்யலில் வெறுமே சாக்கடை மட்டுமே ஓடுகிறது. மீண்டும் என்றைக்கு இயற்க்கையான நிலைக்கு திரும்பி சுற்றுசூழல் மாசில் இருந்து மீள்வோம் என்று புரியவில்லை.  காலம் செல்ல செல்ல மேலும் மேலும் நிலைமை மோசமாவதாகவே உணரப் படுகிறது. மீள்ச்சிக்கான வழியை காணோம்.

Share

Leave a Reply