இன்றைய தினத்தின் துவக்கத்திலேயே மிக சிறப்பாக நிப்டி உயர துவங்கி 8600 என்ற அளவினையும் தாண்டி சென்று பின்னர் 8588.90 என்ற அளவில் முடிவடைந்தது. மூடி நிறுவனத்தின் மொத்தஉள்நாட்டுஉற்பத்தி(GDP) குறித்தான எதிர்பார்ப்பு அறிக்கையானது சந்தையின் ஏறுமுகத்திற்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த நான்கரையாண்டு காலத்தின் மிக குறைந்த விலையாக கச்சா எண்ணைய் விலைகள் குறைந்துள்ளன என்பதும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. நிப்டி வரலாற்று உயர்வில் இருப்பதால் ஓரளவு கணிசமான அளவில் திருத்தம் (Correction) எதிர்வரும் நாட்களில் வரக்கூடும் என்று பலரும் எதிர்நோக்குகிறார்கள்.
ONELIFECAP நிறுவன பங்கானது நேற்றைய விலையிலிருந்து -1.92% இறங்கி 163.10 என்ற விலையில் முடிவடைந்துள்ளது. இதன் விற்பனை இலக்கினை 199.00 என்பதலிருந்து 180.00 என்பதாக மறுநிர்ணயம் செய்கிறோம்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (01-12-2014) சந்தையில் ARVINDREM, EXIDEIND பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 58 | ONELIFECAP | 0.00 | 156.30 | 188.60 |
Sell | 301 | ARVINDREM | 33.20 | 29.50 | 36.70 |
Sell | 60 | EXIDEIND | 166.05 | 147.25 | 174.00 |
* 28-11-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | +721.65 |
பங்கு முதலீடு | – | -9944.10 |
பங்கு மதிப்பு | – | 9459.80 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 100237.35 |
—————————————— | – | ————— |
இன்று வாங்க விலை சொல்லியிருந்த ARVINDREM – 33.20, EXIDEIND – 166.05 என்ற விலைக்கும் வாங்க பட்டு விட்டன.