இன்று சந்தையின் துவக்கத்தின் போது வந்த செய்திகள் எதிர்மறையாக இருந்தமையினால் சந்தை சரிவிலேயே துவங்க கூடும் என்று எதிர்பார்க்க பட்டது. தவிரவும் இன்போசிஸ் போனஸ் பங்குகள் தேதிக்கு பிந்தைய வர்த்தக முறையில் இன்று 2-3% வரையிலும் குறைந்தே துவங்கின. பின்னரும் ஓரளவு மீண்டு வந்த சந்தையினை பெட்ரோலிய பொருட்கள் மீதான அரசின் புதிய வரியினால் பெட்ரோல் நிறுவனங்களான BPCL போன்றவைகள் மீண்டும் கீழே இழுத்து விட்டன என்று சொன்னால் மிகையாகாது. நிப்டி 31புள்ளிகள் அளவிற்கு சரிந்து முடிவடைந்துள்ளது.
ONELIFECAP நிறுவன பங்கினை இன்றைய திறப்பு விலையான 153.65 க்கு விற்க பட்டது. இன்று வாங்க விலை சொல்லியிருந்த TATAMTRDVR பங்கானது 349.55க்கு வாங்க பட்டது. ARVINDREM நிறுவனமானது நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே 32.05 என்ற விலையில் முடிவடைந்துள்ளது.
விற்க விலை சொல்லியிருந்த EXIDEIND நிறுவன பங்கானது சிறப்பாக உயர்ந்து நமது விலையான 174.00 என்பதனையும் கடந்து 175.20 என்பது வரைக்குமாக சென்று 174.40 என்று முடிவடைந்துள்ளது. நமது லாபத்தினை இந்த நிலையில் உறுதி செய்து கொண்டு நாம் வெளியேறி விட்டாலும் இந்நிறுவனத்தின் முந்தைய வருட உச்ச விலையான 183.40 என்பதனை அடுத்த சில நாட்களில் கடக்க போவதை நாம் காணலாம்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (03-12-2014) சந்தையில் BIOCON பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 301 | ARVINDREM | 0.00 | 29.50 | 34.90 |
Sell | 29 | TATAMTRDVR | 0.00 | 318.40 | 367.00 |
Buy | 21 | BIOCON | 467.05 | 435.55 | 490.00 |
BIOCON ரூ.467.05 என்ற விலைக்கு வாங்க பட்டது.