இன்று நிப்டி கிடைமட்டமாக முடிவடைந்தது. 13புள்ளிகள் உயர்ந்தே முடிவடைந்துள்ளது. JINDALSTEL 7.85% மற்றும் ONGC சுமார் 3% அளவிலும் உயர்ந்து முடிவடைந்தன. பெரிய செய்திகளற்ற சற்று இழுவையான தினமாகவே நடைபெற்று முடிவடைந்தது. நிப்டி வாங்கி விற்பர்களுக்கு ஏற்ப சற்றே மேலும், கீழுமாக ஊசலாடி கொண்டு இருந்தது.
நம்மிடம் உள்ள பங்குகளான ARVINDREM +0.47% என்ற அளவில் உயர்ந்து 32.20, TATAMTRDVR நிறுவனம் +1.10% உயர்ந்து 355.25 எனவும், BIOCON நிறுவனம் -0.16% குறைந்து 466.30 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. இன்று நமது விலைகளுக்கு ஏற்ப BIOCON நிறுவன பங்குவாங்க பட்டது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (03-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 301 | அரவிந்த் ரெமிடி ARVINDREM | 0.00 | 29.50 | 36.70 |
Sell | 29 | டாட்டா மோட்டார் டீவிஆர் TATAMTRDVR | 0.00 | 318.40 | 367.00 |
Sell | 21 | பயோகான் BIOCON | 0.00 | 435.55 | 490.00 |
குறியீட்டில் தராமல் நீர் என் நிறுவனத்தின் பெயரை முழுதாகக் கொடுத்தால் எங்களை மாதிரி தற்குறிகளுக்குப் புரியுமே
பாண்டியன் நீங்கள் கேட்டது போல தற்போது மாற்றியமைத்துள்ளேன். சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி.