அன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர்.
நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். பிரபலம் ஆவதை பின்னர் பார்ப்போம்.. 🙂 🙂
ரயிலில் வரும் போது உள்ளேயும் படம் எடுத்தேன்…
இந்த வருடம் நல்ல மழை இருந்ததால் ரயில் செல்லும் வழியின் அருகே வந்து கொண்டிருந்த ஓடையில் தண்ணீர் நன்றாக இருந்தது.
இதற்கு முன்னதாக பலமுறை சென்ற போதெல்லாம் காய்ந்து கிடக்கும் அல்லது சாக்கடை தண்ணீர் என்றளவிலேயே ஓடிக்கொண்டிருக்கும்.
இதில் நான் முக்கியமாக சொல்ல நினைப்பது சில இடங்களில் தண்ணீரில் செந்தாமரை மற்றும் வெள்ளை வண்ண மலர்கள்(அல்லி??) போன்றவைகள் மிக அழகாக மலர்ந்து இருந்தன. காய்ந்த கிடக்கும் ஒரு இடத்தில் இந்தளவு தண்ணீரும், மலர்களையும் கண்டது மனதிற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படம் தோன்றி செல்பி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி போட்டோ பிடித்தகுடி எங்களது