சந்தையின் துவகத்திலேயே இருந்தே சீராக சரிந்து வந்து கடைசியாக -0.83% என்ற அளவில் குறைந்து -68.80 புள்ளிகள் சரிவுடன் முடிவு பெற்றது. GAIL, TATASTEEL என இரண்டு நிறுவன பங்குகளும் சுமார் -4,5% என்றளவுக்கு இறங்கிவிட்டன. சந்தையானது 8170 என்ற புள்ளிகள் வரையிலும் கீழிறங்க கூடும். அதனை கடந்தும் கீழே சென்றால் போதுமான ஆதரவின்றி அடுத்த கட்டதிற்கு செல்கிறது என்றே கொள்ளலாம். 8170 என்ற அளவிற்கு செல்கிறாதா, அப்படி சென்றால் தேவையான அளவு ஆதரவினை பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நம்மிடம் உள்ள பங்குகளான NEYVELILIG நிறுவன பங்கானது நட்ட நிறுத்த விலையினை விட குறைவாக முடிவடைந்துள்ளது. BIOCON நிறுவனம் சற்றே -0.31% இறங்கி 453.70, TATAMTRDVR நிறுவன பங்கானது +0.19% உயர்ந்து 336.85 என்ற அளவில் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (15-12-2014) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | 29 | TATAMTRDVR | 0.00 | 318.40 | 367.00 |
Sell | 21 | BIOCON | 0.00 | 435.55 | 490.00 |
Sell | 117 | NEYVELILIG | 0.00 | 0.00 | 89.45 |
இன்றைக்கு NEYVELILIG நிறுவனத்தின் திறப்பு விலை 80.50 என்பதாக அமைந்து நமது பங்கு விற்க பட்டது.