சரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.
ஆனாலும் எனக்கு அவர் அளித்துள்ள நன்மைகளும் அளவிட அரியது. நம்முடைய ஒரு ரூபாய் காணாமல் போனால் வருவதை காட்டிலும் நம்மிடம் கோடி ரூபாய் இருந்து காணாமல் போனால் தான் நமக்கு வருத்தம் மிக பெரியஅளவில் இருக்கும் என்று பல்வேறு வாய்புகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அது நம்மை நோக்கி வருபது போல செய்து கலைந்து போக செய்த லீலா வினோதங்கள் மிக மிக அதிகம். இப்போதெல்லாம் எந்த திட்டம், வியாபாரம் அல்லது யோசனைகள் பற்றி பேச்சு வந்தாலும் சரி ஜென் நிலையில் எடுத்து கொள்ளும் மனோபாவம் ஆகி விட்டது. ஏப்படியாகின் – காசோலை நடப்பான பிறகே.. (cheque after realization) என்ற தாரக மந்திரத்தையே உச்சரித்து கொள்வேன். எந்த லாபமோ, அனுகூலமோ ஏதாக இருப்பினும் அது நம் கைக்கு வந்த பின்னர் மட்டுமே உண்மை. கலைந்து விட்ட சூழல்களும், இழப்புகளும் எண்ணற்றவைகள்.
எப்படி பட்ட தோல்விகளும். சரிவுகளும் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை அளவின்றி அளித்துள்ள சனி பகவான் என் கட்டத்திலிருந்து வேறுக்கு செல்வதா இன்று என் தாயார் கூறினார்கள். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆகையினால் இந்த சந்தர்ப்பத்தில் சனீஸ்வரருக்கு எனது நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
எப்படி எல்லாம் ஐசு வைக்கவேண்டி உள்ளது.
சனி பகவான் அடிவருடி என்று உமக்கு நாமகரணம் சூட்டுகிறேன்.