இன்றைக்கு சந்தை 0.81% உயர்ந்து 8,225.20 புள்ளிகள் என்பதாக முடிவடைந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) குறித்து மத்திய நிதியமைச்சர் இன்று அரசு விரைவில் மசோதாவினை அறிமுக படுத்தும் என்று பேசியுள்ளார் என்பதே இன்றைய முக்கிய செய்தியாக உள்ளது. இதற்கும் சந்தை உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒருபுறம்.
இப்போதைக்கு நம் கையில் எந்த பங்கும் கையிருப்பில் கிடையாது. அடுத்த சந்தையில் வாங்க பரிந்துரை செய்ய பட்டுள்ள கரூர்வைஸ்யா வங்கியானது இங்கே நுட்பரீதியிலான அலசலில் (technical analysis)வாங்க சொல்லியிருந்தாலும் அடிப்படை கூறுகளின் படியும் (fundamental) சிறந்த நிலையில் உள்ளதாகும். 2016 ம் வருடம் முடிய வைத்திருக்க இயலுபவர்கள் தாராளமாக வாங்கி வைக்கலாம். போனஸ், பிரிப்பு(split) போன்ற மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ள பங்காகும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (22-12-2014) சந்தையில் KARURVYSYA என்ற இரு நிறுவன பங்கினை வாங்க பரிந்துரை செய்ய படுகிறது. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Buy | 17 | KARURVYSYA | 572.85 | 520.00 | 607.25 |
* 19-12-2014 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -3047.95 |
பங்கு முதலீடு | – | -0.00 |
பங்கு மதிப்பு | – | 0.00 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | 96952.05 |
—————————————— | – | ————— |
இன்றைக்கு KARURVYSYA நிறுவன பங்கானது ரூ.572.85 விலைக்கு வர்த்தகமாகியுள்ளது.