தினத்தின் துவக்கத்திலேயே இறங்கு முகமாக துவங்கியது. முன்பேர வர்த்தக மாதந்திர முடிவு தினத்தின் என்பதால் சந்தை 8500 என்ற புள்ளிகளில் முடிய கூடும் என்ற எதிர்பார்ப்பை முறியடித்து 8328.25 என்ற தாழ்நிலைக்கு சென்று விட்டு இறுதியில் -2.21% அல்லது -188.65 என்ற அளவு குறைந்து 8,342 என்பதாக முடிவடைந்துள்ளது. சந்தை முக்கியமான ஆதரவு நிலையினை தக்க வைத்து கொள்ளாது கீழே இறங்கியுள்ளது என்றே பலரும் கருதுகிறார்கள்.
COALINDIA பங்கானது -2.63% சரிந்து 352.30 என்பதாகவும், GSPL பங்கானது +4.41% உயர்ந்து 124.25 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
COALINDIA பங்கானது நமது நட்டநிறுத்த விலைக்கு கீழாக இன்று வர்த்தகமாகியுள்ளது.
பொதுவாக பெரிய நிறுவனங்களில் நிர்வாகிகளின் அலுவலக அறை போன்றவைகளின் ஆடம்பர அமைப்பினை நிறுவனம் நட்டத்தில் செல்லும் போதும் குறைத்து கொள்வதில்லை. இது உலக அளவிலான பொதுவான குற்றசாட்டே. லேமன் சகோதரர்கள் நிறுவனத்தை கைதூக்கி நிறுத்த அரசு அளித்த நிதியாதரவில் கணிசமான பங்கு நிர்வாகிகளின் ஆடம்பர செலவுக்கே சென்றதாக முணுமுணுப்பு உண்டு. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன.. 🙂 🙂 எனது முதலீடே நட்ட நிலையில் சென்று கொண்டிருந்தாலும் சரி, நம் வலைபதிவு இடுகைகளில் புதிய வசதியாக வரைபட வசதியினை உள்ளிணைத்து உள்ளோம். இன்னமும் வேறு ஏதேனும் வசதிகள் சேர்க்க இயலுமா என்பதை வரும் காலங்களில் யோசிக்க வேண்டும்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (27-03-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Sell | COALINDIA | 25 | 0.00 | 357.10 | 0.00 |
Hold | GSPL | 81 | 0.00 | 104.40 | 0.00 |
Leave a Reply