குறுகிய இடைவெளியினுள் துவங்கிய சந்தையானது மதியவாக்கில் ஆதரவினை இழந்து இறங்கு முகம் கண்டது. பின்னர் சற்றே மீண்டு வந்து நேற்றைய முடிவுக்கு இன்று எந்த மாற்றமும் இல்லாதவாறு இறுதியில் -0.01% அல்லது -0.75 என்ற அளவு குறைந்து 8,341.40 என்பதாக முடிவடைந்துள்ளது.
GSPL பங்கானது +1.01% உயர்ந்து 125.50 என்பதாகவும் முடிவடைந்துள்ளது. COALINDIA பங்கானது 353.15 என்ற திறப்பு விலைக்கு விற்க பட்டது.
இந்த காலாண்டின் இறுதி தினங்களின் நிலவர படி -4.5% நட்டத்தை சந்தித்துள்ளேன். மேற்கொண்டும் இதனை வளர விடாது லாப திசை நோக்கி நகர்த்துவதே அடுத்த காலாண்டின் இலட்சியமாக இருக்கும். இந்த காலாண்டில் நான் சோதித்து பார்த்த அனேக முறைகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. அந்த முறைகள் தவறு என்று கூற மாட்டேன். எனக்கு ஒத்துகொள்ளவில்லை என்பதே சரியானதாக இருக்கும்.. 🙂 🙂 எனவே முற்றிலும் மாறுபட்ட முறையினை அடுத்த காலண்டில் எனது பாணியாக கொண்டு முயன்று பார்க்க உள்ளேன்.வரும் தினங்களில் அடிக்கடி -அன்றாடம்- என்பது போல இடுகைகள் போட தேவையிராது என்றே தோன்றுகிறது. ஏதேனும் புதிய பங்குகள் வாங்க, விற்க அல்லது கையிருப்பில் உள்ளவைகளுக்கு நட்டநிறுத்த விலையினை மாற்றியமைக்க என்பதாக மிக குறைவான பதிவுகளுக்கே - வர்த்தகங்களுக்கே – தேவையிருக்க கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (30-03-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்க பரிந்துரை செய்ய படவில்லை. நம்மிடையே உள்ள வாங்க, விற்க வேண்டிய விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | GSPL | 81 | 0.00 | 104.40 | 0.00 |
* 27-03-2015 அன்றைய முடிவு விலைகள் படி மதிப்புகள்…
முதலீடு | – | 100000.00 |
லாபம்/நட்டம் | – | -4650.35 |
பங்கு முதலீடு | – | -9,995.40 |
பங்கு மதிப்பு | – | +10165.5 |
—————————————– | – | ————— |
மொத்தம் | – | +95519.75 |
—————————————— | – | ————— |
Leave a Reply