இந்த துண்டு படத்தை பார்த்த போது இருந்து பள்ளி நாட்களில் படித்த பொன்னார் மேனியனே பாடல்தான் நினைவில் நீங்காது திரும்ப, திரும்ப வந்து கொண்டிருக்கிறது. முதல் பாதி அருமை.. இரண்டாம் பாதி மிக அருமை என்று என் தாயார் கூறினார்.. :) :) பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?
எனக்கு பிடித்த சில துண்டுபடங்களை அவ்வப்போது இங்கே பகிர போகிறேன். இதனை யார் எடுத்தார்கள் என்ற விவரம் பெரும்பாலும் எனக்கு தெரியாது.
சிவ சிவ
அருமையான பதிவு….
பொன்னார் மேனியனே என்பது முற்றிலும் மெய்யே…