சும்மா பங்குன்னா என்ன, வியாபாரம் அப்படின்னா என்ன அப்படின்னு கொஞ்சம் குட்டைய குழப்பிய கட்டுரையை எழுதிய மயக்கத்தில் மதியானம் அம்மா கொஞ்சம் சோறு அதிகமா போட்டு விட்டதாலும், ஆற்காட்டார் புண்ணியத்தில் மின் வழங்கல் இல்லாததாலும் லேசா கண்ண மூடினேன்.

பகல் கனவு
வழக்கமா வந்து போற அம்மிணிகளுக்கு பதிலா இன்னைக்குன்னு பாத்து எங்க அப்பாரு வந்தாரு. வந்தவரு என்ன மவனே என்ன பண்றேன்னு தேனொழுக விசாரிச்சாரு… அப்பறமா உலக நாயம் எல்லாம் பேசிட்டு மவனே ஏகப் பட்ட வழியிலே பணத்தை தொலைச்சே. ஆனாலும் நா சம்பாரிக்கிறது எல்லாம் உனக்குதாண்டா… அதனாலே ஏதாவது பணம் வேணுமா.. அப்படின்னு கேட்டார். உடனே நானும் ஆமாப்பா கொஞ்ச பணத்தை பங்கு வியாபாரத்திலே போட்டு பார்க்கலாமுன்னு இருக்கேன்னு சொன்னேன். சரி முதலீடா எவ்வளவு வேணுமின்னாரு… ஒரு லட்சம் ஆரம்பத்திலே போட்டு பார்க்கலாமுன்னு சொன்னேன். சரிடா ஆவணி பொறந்தவுடனே பொழப்பு ஆரம்பிக்கிற வழிய பாருன்னு சொல்லிட்டு பணத்தை வூட்டு பீரோவிலோ இருந்து எடுத்துக்கோ..பாத்து இதுலையாவது கெட்டியா இருந்து பொழக்கிற வழிய பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
சரி கனாவோ, நனவோ வரும் ஆவணியிலே பூசை போட்டுற வேண்டியது தான். அது வரைக்கும் மத்த சோலிய பார்ப்போம். என்னங்க நா சொல்றது… ஆஹா அதுக்குள்ளே ஏகப் பட்ட விசயங்க பண்ண வேண்டியிருக்கு. நானு எந்தெந்த துறையிலே (sector) பணத்தை போடறதுன்னு முடிவு பண்ணனும். அது போக எம்புட்டு ரூவா ஒரு கூறு அப்படின்னு முடிவு பண்ணவேணும். சரி ஓரிரு நாளுலே முடிவு செய்வோம்.
Leave a Reply