கடந்த சனியன்று (25-04-2015) அன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையிலும் சுமாராக 10,000 பேர் வரையிலும் இறந்திருப்பார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை சீற்றத்தில் இறந்து விட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.
நேபாளத்தை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வரையிலும் உணரபட்டது. பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் புன்னகை தான் என புத்தன். இத்தனை அழிவுகளையும் தடுக்க இயலா இவரால் என்ன பயன்.. கேட்டால் சாவறியா வீட்டினுள் இருந்த கடுகு வாங்கி வா என்பார்..
தானே அழிந்தாலும் புத்தன் அழ போவதில்லை.. பாவப்பட்ட மனிதர்களை அழ விட்டு வேடிக்கை பார்ப்பது தான் இவனுடைய வாடிக்கை போலும்..
குழந்தைகள் யானை விளையாட்டு ஆடினாலும், இளவரசிகள் அம்பாரி ஏறினாலும், இப்படி வானமே இடிந்து விழுந்தாலும் சுமப்பது என் கடன் என்கிறதோ…
எண்ணற்ற வீடுகள் என்பதை காட்டிலும் கிட்டதட்ட ஏராளமான நகரங்கள் மற்றும் கிராமங்களின் இன்றைய நிலை இவ்வாறு தான். இவர்கள் என்று மீண்டு வர நம்மால்ஆன உதவியாக பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு பொருளுதவி செய்வோமாக.
மனதை உலுக்கும் படங்கள் இருப்பினும் அதை மீள்பகிர்வு செய்யும் மனோதைரியம் எனக்கு இல்லை.
ஒளிபடங்கள் மூலம் : கூகிள் தேடல் முடிவுகள்
நல்ல பதிவு அண்ணே