புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

கன்னி அல்ல.. கண்ணீர் ராசி.

கன்னி ராசி என்பது பாரம்பரியமாக ராசி அ​மைப்பில் கன்னிராசி​யை குறிக்கும். இங்கு நான் கன்னி ராசி​ பல​னை பற்றி​ ​பேச ​போவதில்​லை. கன்னியருடனான கண்ணீர் ராசி​யை பற்றி​​யே ​பேச உள்​ளேன்.. 🙂 🙂

அழு கை

கண்ணீர் ராசி என்று புதியதாக ஒன்று உள்ள​​​​தோ என்று சமீப காலமாக சந்​தேகமாக​வே உள்ளது. ​தோழியராக அ​மைய கூடியவர்க​ளை தவிர்த்து விடு​வோம். சில​ரோ ஏ​தேனும் ஒரு வ​கையில் உண்​மையாக​வோ அல்லது நடப்பு மு​றையில் உறவாக அ​மைந்து விடுகிறார்கள். இப்படி . . . → Read More: கன்னி அல்ல.. கண்ணீர் ராசி.

Share

கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது.

வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நல்ல நிகழ்ச்சி இன்று என் தங்​கை மகனுக்கு இனி​தே ந​டை​பெற்றது. எந்த வித மத சடங்குகளுமின்றி, ஆங்கில வழி வி​ளையாட்டு பள்ளிகளுமின்றி (play school) எளி​மையாய் தமிழ்நாடு அரசின் அங்கன்வாடி என்னும் பால்வாடியில் ​​ சேர்க்க பட்டதுடன் நி​றைவு ​பெற்றது.

வித்யாரம்பம்

பல்​வேறு நண்பர்கள், உறவினர்கள் . . . → Read More: கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

Share

பரம்ப​ரை வீடு

நூற்றாண்டுகளுக்கு ​மேலான எங்கள் பாரம்பரிய பரம்ப​ரை வீடானது இன்று (29-03-2012) விற்க பட்டு விட்டதாக முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. என்னாலும், என் தந்​தையாலும் அத​னை மீண்டும் ​கைக்​கொள்ள இயலவில்​லை என்ப​​தை பதிவு ​செய்வ​தே இங்கு பகிர்வதன் முக்கிய ​​நோக்கம்.வாரிசுரி​மையிலும், அனுபவத்திலும் தமக்​கே வரும் என்று நம்பியிருந்த என் ​பெற்​றோர்களுக்கு ​சொத்தானது ​வே​றொரு ​பெண் வாரிசுக்கு ​குறுக்கு வழியில் போன​தே மிகவும் அதிர்ச்சியான விசயம்.

வாழ்ந்து ​கொண்டிருந்த வீட்டி​னை காலி ​செய்து விட்டு உள்ளூரி​லே​யே . . . → Read More: பரம்ப​ரை வீடு

Share

பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

எனது தந்​தைக்கு பிறந்த நாள். அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ​தெரிவிப்ப​தைவிட மகிழ்வான ​செயல் ​வே​றென்ன இருக்கிறது..?!! வாழ்த்த வயதில்​லை என்று ​சொல்லுவ​தை விட நூற்றாண்டுகள் வாழ்ந்து எங்க​ளை வழிநடத்த ​வேண்டுகி​றேன்.

புத்த கயாவில்

காசி பயணத்தில்

Share

பொங்கல் வாழ்த்து – 2012

பொங்கல் நல்வாழ்த்துகள்..!!

நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!!

Share

சித்திரக் கதைகள்

முதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

எனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.

சித்திரக் கதை முன்அட்டை

அந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போல இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் . . . → Read More: சித்திரக் கதைகள்

Share

3ம் காலாண்டு 2011

பணக்காரன் ஆவறதுக்கு முன்முயற்ச்சியா பங்கு சந்தையில் முதலீடு செய்யும் விளையாட்டு ஒண்ணு விளையாடி பார்க்க முடிவு செய்து புது வியாபாரப் பூசை விளையாட்டை துவக்கியிருந்தேன்.. 🙂 🙂 முன்றாம் காலாண்டு முடிவில் கிட்டதட்ட 11சதமானம் நட்டத்தில் உள்ளது வியாபாரம். ஆட்டத்தை துவங்கும் போது எழுதியிருந்த வரிகள் இது…

அப்பப்ப லாபம் வந்தாக்கா இங்கிட்டு கட்டுரை எழுதி பந்தா பண்ணிக்குவேன். நட்டமுன்னா ஓரிரு வரி தலைப்பு செய்திகள் போல வரக்கூடும். தோத்தாங்கோளி கதையை எழுத யாருக்கு தான் . . . → Read More: 3ம் காலாண்டு 2011

Share

INTEC-2012

நண்பர்கள் அனைவரையும் கோவையில் வரும் 2012, ஜனவரி 4-9 வரை நடைபெற உள்ள இன்டெக் தொழிற்கண்காட்சிக்கு வருக.. வருக.. என வரவேற்கிறேன்.

இன்டெக் – 2012

சுருங்க சொன்னால் செந்தமிழ் மாநாடு நடைபெற்ற இடத்தில் வழமையாக நடக்கும் தொழிற் கண்காட்சியாகும். தொழிற்சாலைகள் கூட்டமைப்பினரால் கொடீசியா – CODISSIA நடத்த படும் பொது நிகழ்ச்சியாகும். இன்டெக்கிற்க்கான தளப்பகுதி http://www.intec.codissia.com/.

தொழில் முனைவோர், நவீன தொழில் நுட்பம் அறிய விழைவோர் அனைவரும் வருக.. வந்து பயனடைக.

. . . → Read More: INTEC-2012

Share

2011-ல் கவர்ந்த தளங்கள்

2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்…

இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது.

http://arrkay.blogspot.com/

செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது.

www.viruvirupu.com

உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய . . . → Read More: 2011-ல் கவர்ந்த தளங்கள்

Share

முதலாளித்துவம் Vs சூதாட்டம்

குழுமத்தில் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் எனது வாதத்தை இங்கே தொகுத்துள்ளேன். ஏனோ இங்கே போட்டு வைப்பது தேவை என்று படுகிறது.

இந்த இணைய வழிவணிகத்தில் அடிப்படை குழப்பம் உள்ளது. இருவேறு முறைகளை மக்கள் குழப்பி கொள்கிறார்கள்.

பங்கு சந்தை இணைய வழி வணிகத்தில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, விற்க செய்யலாம். இது சுதந்திர பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பே. இதை ஏற்பதில்லை மாற்று கருத்து கிடையாது.

இதே பங்குசந்தையிலும், காமாடிட்டி சந்தையிலும் இணைய வழி . . . → Read More: முதலாளித்துவம் Vs சூதாட்டம்

Share