புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

குடியரசு தின வாழ்த்துகள் – 2016

நண்பர்கள், வாடிக்​கையாளர்கள், வாசகர்கள்  அ​னைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!

Share

காந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்

இன்று (20-09-2015) மா​லை 6மணியளவில் ​​கோ​வை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.​ஜெய ​மோகன் "காந்தியம் இன்று" என்ற த​லைப்பில் உ​ரையாற்றினார்.              மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு ​செல்லரித்து ​வெறும் பழம்​பெரும் ​பெயர்க​ளை தாங்கிய சடலங்களாக உள்ளன என்ப​தை உ​ரையின் துவக்கத்தி​லே​யே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்​டை ​போன்ற​வைகளால் நி​னைவு ​கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்த​வொரு சமூகத்திலும் சிந்த​னைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்

Share

நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015

​சென்​னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு ​பெரும் ​வெற்றி ​பெற நமது நல்வாழ்த்துக​ள்..!! நி​றைய முதலீடுகள் தமிழகம் ​வந்து ​தொழில் வளம் ​பெருகட்டும்…!!!

 

குறிப்பு :  ​அரசியல் மன​வேறுபாடுக​ளை தாண்டி மக்களால் ​தெரிவு ​செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு.

. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015

Share

அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்

படிக்க கூடிய ​செய்திக​ளை அப்படி​யே நம்புவதற்கும், எடுத்து ​கொள்வதற்கும் ​கொஞ்சம் ​வேறுபாடு உண்டு. அத​னை இங்​கே பார்ப்​போம்.

சீனாவி​ன் ​​​பொருளாதாரத்​தை அ​டையாள படுத்த அந்த நாடானது அ​மெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் ​கொடுத்துள்ளது என்பது முதன்​மையாக சுட்டிகாட்ட படும். கூட​வே அ​மெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் ​பெரிய நாடு சீனா என்றும் படிக்க கி​டைக்கும். – இந்த கூற்று உண்​மைதான். இ​தை நம்பலாம். ஆனால் அப்படி​யே எடுத்து ​கொண்டால் . . . → Read More: அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்

Share

கலாம் – அஞ்சலி

அப்துல் கலாம்

சற்று முன்னர் (இன்று மா​லை) இந்தியாவின் முன்னாள் குடியரசு த​லைவர் திரு.அப்துல் கலாம் இயற்​கை எய்தினார் என்ற ​வருந்தமான ​செய்தியி​னை ​அறிந்​தேன். இந்தியாவின் இ​ளைஞர்கள் குறித்து சிந்தித்த ​வெகு ஒரு சில த​லைவர்களில் ஒருவ​ரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்திய​டைய ஆண்டவ​னை ​வேண்டுகி​றேன்.

Share

பண வீவீவீவீக்க்க்ககம்..!!

அறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அ​சைபடம் நீக்கபட்டுள்ளது.

                      பல ​செய்திகள் படிப்பதற்கும், ​கேள்வி படுவதற்கும் அத​னை​யே ​நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வு​க​ளை ​கொடுக்க கூடியன. அந்த வ​கையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்ப​வைக​ளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்​போது எல்லாம் அ​வைகள் ​வெறும் புள்ளிவிவரங்களாக​வே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..!!

Share

​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி

கடந்த சனியன்று (25-04-2015) அன்று ​நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவ​ரையிலும் சுமாராக 10,000 ​பேர் வ​​ரையிலும் இறந்திருப்பார்கள் என்று ​செய்திகள் ​தெரிவிக்கின்றன. இயற்​கை சீற்றத்தில் இறந்து விட்ட அ​னைவருக்கும் எனது அஞ்சலிகள்.

​​நேபாளத்​தை ​மையமாக ​கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வ​ரையிலும் உணரபட்டது. பல உயிர்​​சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: ​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி

Share

தூய ​கோ​​வை

மறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..

ஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.

நம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே..          மற்றபடி கின்னஸ் சாத​னை என்ப​தை பற்றி எனக்கு உடன்பாடு கி​டையாது. இருப்பினும் நல்லது எதன் ​பொருட்டு நடப்பினும் வர​வேற்​போமாக.

. . . → Read More: தூய ​கோ​​வை

Share

அரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..!!

இன்று ​டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவி​யேற்றுள்ள அரவிந்த் ​​கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி மு​றையில் பல்​வேறு சந்தர்பங்களில் புதிய புதிய த​லைவர்கள் ​வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியி​னை துவக்கி ஆட்சியி​னை பிடித்துள்ளார்கள். புது​வையின் திரு.ரங்கசாமி ​போன்றவர்க​ளை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அ​னைவருக்கு​மே ​வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய ​கொள்​​கை – இந்துயிசம், ​சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் ​கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..!!

Share

வாஞ்சி நாதன் – நி​னைவு தினம்

சுதந்திர ​போராட்ட வீரர் வாஞ்சி நாதன் நி​னைவு தினம் முன்னிட்டு இன்​றைக்கு ஒரு கட்டு​ரை​யை குழுமத்தினுள் படிக்க ​​நேர்ந்தது. அதன் மூலச்சுட்டி..

http://senkottaisriram.blogspot.in/2012/08/blog-post.html?m=1

.. இதில் கவனிக்க ​வேண்டிய விசயம்…

இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் . . . → Read More: வாஞ்சி நாதன் – நி​னைவு தினம்

Share