குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 27th, 2015% திரு,ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் கோவை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் நடைபெற்றது. மிகச் சரியாக காலை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் மேலும் நான்கு நண்பர்கள் வந்தடைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பிகை அவர்களும் இணைந்து கொண்டார்.
எதை பற்றி பேசுவது என்பது குறித்த . . . → Read More: கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015
By தமிழ்பயணி, on November 6th, 2014% எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகப்பெரும் படைப்பாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மாலை 5மணிக்கு மியூசியம் தியேட்டர் ஹால், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் கெளரவிக்க பட உள்ளனர்.
. . . → Read More: வெண்முரசு – வெளியீட்டு விழா
By தமிழ்பயணி, on October 26th, 2014% இந்திய ஆங்கில கதாசிரியர் அமஷ் அவர்களின் THE IMMORTALS OF MELUHA நாவலின் தமிழாக்கமே மெலூஹாவின் அமரர்கள். ஆங்கிலத்தில் இந்த நாவல் புகழ்பெற்றதை அறிந்ததால் தமிழில் படிக்க மிக்க ஆர்வம் இருந்தது. எப்படியோ வெளியாகிய பின் தாமதமாகவேனும் படிச்சு முடித்து விட்டேன்.
இதை பற்றி எழுத முயலும் போது கூகிள் தேடுதலில் அருணாவின் பக்கங்கள் – என்னும் வலைபதிவில் மிக அருமையான விமர்சனம் கண்டேன். அவருடைய வார்த்தைகள் பின்வருமாறு…
. . . → Read More: மெலூஹாவின் அமரர்கள்
By தமிழ்பயணி, on February 18th, 2014%
http://en.wikipedia.org/wiki/Security_Analysis_%28book%29
வாரன் பப்பெட் வாழ்வினை படிக்கும் போதெல்லாம் அவருடைய ஆசிரியரான பெஞ்சமின் கிரகாம் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்க ஆவல் வரும். ஆங்கிலத்தில் அதுவும் 80 வருடங்களுக்கு – 1934 – எழுத பட்ட புத்தகத்தில் அப்படியென்ன இருக்க போகிறது என்ற அசட்டையும், சோர்வும் படிக்க வரும் ஆசையை முடக்கி வந்தது. தற்போது என்ன ஆனாலும் சரி படித்தே தீருவது என்று விடாப்பிடியாக மின்நூலாக இறக்கி கொண்டு விட்டேன். இது போன்ற நூல்கள் இன்று வரையிலும் . . . → Read More: Security Analysis – Benjamin Graham
By தமிழ்பயணி, on December 11th, 2012% விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு
By தமிழ்பயணி, on September 20th, 2012% நம்மில் பலருக்கும் சிறுவயதில் தீவிரமான கதை புத்தக படிக்கும் இருந்திருக்கலாம். அப்படியில்லையெனினும் பால்ய வயதில் தமிழகத்தில் அம்புலிமாமா கதைப் புத்தகத்தை சந்திக்காது வளர்ந்திருக்க இயலாது. வளர்ந்து விட்ட இன்றைய நிலையில் அந்த காலத்து வண்ண படங்கள் அடங்கிய அந்த புத்தகத்தை நினைத்து பார்த்தாலே இனிமையான நினைவுகள் வந்துமோதுகின்றன.
விக்கிரமாதித்யன் மற்றும் வேதாளம் போன்ற பல கதாபாத்திரங்கள் அச்சிறு வயதில் நமக்கு அறிமுகமாது. அதே காலகட்டத்தில் டிடி யில் விக்ரம் அவுர் வேதாள் புரிந்தும் புரியாமலும் இரசிக்க வைத்தது.
. . . → Read More: அம்புலிமாமா – பொக்கிஷ குவியல்
By தமிழ்பயணி, on January 11th, 2012% முதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
எனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.
சித்திரக் கதை முன்அட்டை
அந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போல இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் . . . → Read More: சித்திரக் கதைகள்
By தமிழ்பயணி, on May 3rd, 2011% இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கிருஷ்ணா கிருஷ்ணா நூலை படித்தேன்.கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.150/- இணையத்தில் வாங்க சுட்டி.. https://www.nhm.in/shop/978-81-8368-080-6.html
கிருஷ்ணா கிருஷ்ணா
ஒரு பெரும் படைப்பினை பற்றிய விளக்கம் அல்லது தனது பார்வை என்ற வகையில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மகாபாரதத்தின் தனி பெரும் நாயகனாகிய கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்த தனது கோணத்தை சொல்லுகிறார்.
கண்ணன் லீலைகளை சொல்லிச் சொல்லி ஏகப்பட்ட நூல்கள் பாரத நாட்டில் வந்துவிட்டன. இதில் நவீன கால . . . → Read More: சமுதாயக் கனவு – கிருஷ்ணா
|