குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 1st, 2020% இந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020
By தமிழ்பயணி, on January 25th, 2016%
நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on September 20th, 2015% இன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் "காந்தியம் இன்று" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்
By தமிழ்பயணி, on September 13th, 2015% சீனா நுகரும் சில அடிப்படை கனிமங்களான நிலக்கரி, இரும்பு, அலுமினியம் மற்றும் சில கனிமங்களின் நுகர்வு குறித்தான வரைபடம்…
Courtesy of: Visual Capitalist
By தமிழ்பயணி, on September 9th, 2015%
சென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்..!! நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…!!!
குறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு.
. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015
By தமிழ்பயணி, on July 27th, 2015% அப்துல் கலாம்
சற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
By தமிழ்பயணி, on June 28th, 2015%
அறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அசைபடம் நீக்கபட்டுள்ளது.
பல செய்திகள் படிப்பதற்கும், கேள்வி படுவதற்கும் அதனையே நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வுகளை கொடுக்க கூடியன. அந்த வகையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்பவைகளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்போது எல்லாம் அவைகள் வெறும் புள்ளிவிவரங்களாகவே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..!!
By தமிழ்பயணி, on May 1st, 2015% கடந்த சனியன்று (25-04-2015) அன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையிலும் சுமாராக 10,000 பேர் வரையிலும் இறந்திருப்பார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை சீற்றத்தில் இறந்து விட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.
நேபாளத்தை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வரையிலும் உணரபட்டது. பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி
By தமிழ்பயணி, on February 14th, 2015% இன்று டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி முறையில் பல்வேறு சந்தர்பங்களில் புதிய புதிய தலைவர்கள் வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியினை துவக்கி ஆட்சியினை பிடித்துள்ளார்கள். புதுவையின் திரு.ரங்கசாமி போன்றவர்களை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அனைவருக்குமே வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய கொள்கை – இந்துயிசம், சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on June 17th, 2014% சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதன் நினைவு தினம் முன்னிட்டு இன்றைக்கு ஒரு கட்டுரையை குழுமத்தினுள் படிக்க நேர்ந்தது. அதன் மூலச்சுட்டி..
http://senkottaisriram.blogspot.in/2012/08/blog-post.html?m=1
.. இதில் கவனிக்க வேண்டிய விசயம்…
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் . . . → Read More: வாஞ்சி நாதன் – நினைவு தினம்
|