குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on February 1st, 2014%
கடந்த நாட்களாக ஆத்தாவிற்க்கு சில தற்செயலான விசயங்கள் வந்தடைகின்றன. கவனம் இங்கே நான் “தற்செயல்” என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இது ஒரு சீசன் போல. ஒரே பிரச்சினை, ஒரே காரணம், ஒரே முடிவு என்று மூன்று விசயங்கள். காதலானது கசிந்துருகி பெரியவர்களால் ஆசிர்வதிக்க பட்டு, மணம் செய்து, தனியே வாழவைக்க பட்டு விவாகரத்தில் சென்று நின்றுள்ளன. ஒரே போல உள்ளது என்றாலும் எதிர்கால வரலாற்று குறிப்புகளுக்காக இங்கே ஒவ்வொன்றையும் பதிவு செய்து வைக்கிறேன்.1. எதிர் வீட்டு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 9
By தமிழ்பயணி, on January 18th, 2014%
வழமை போல ஆத்தாவினை சந்திக்க வெள்ளைவேட்டி மனிதர் ஒருவர் வந்திருந்தார். ஊர் நாயம், உலக நாயம் எல்லாம் பேசி விட்டு முக்கியமான சமாச்சாரம் ஒன்றையும் சொல்லி சென்றார். சில மாதம் முன்னர் எனக்கான வரன் தேடும் படலத்தில் ஒரு பெண் வீட்டாரிடம் பேசியிருந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் சரி என்பதாகவும், ஒரு சமயம் பின்வாங்குவதாகவும் இருந்தார்கள். எம்மைவிட சற்றே உயர்தரமும் பெண்ணுக்கு மிகச்சிறு உடல் குறைபாடாகவும் நிலவரம். பாரம்பரியமாக தெரிந்த குடும்பம் என்ற ரீதியில் சரியேன்றே . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 8
By தமிழ்பயணி, on December 1st, 2013% கடந்த சில வாரங்களாக சரியாக எழுத முடியாது போன ஆத்தா சில குறிப்புகள் மீண்டும் தொடர்கிறது. விடாது கருப்பு.. வருடங்களுக்கும் மேலாக சிலாகித்து பேசி வரும் சாந்தி கியர்ஸ் உணவகத்திற்க்கு இன்னமும் மதிய உணவிற்க்கு ஆத்தாவை அழைத்து செல்லாத குறை இருந்து வந்தது. ஆத்தாவால் தினசரி சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல் என்று மதிய உணவினை செய்யாமல் இருக்க இயலுவதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் ஆத்தாவிற்க்கு உடல்நல கேடு என்று அர்த்தம். நானும் அவ்வப்போது அம்மா . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 7
By தமிழ்பயணி, on October 13th, 2013%
வழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை நடைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.கேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 6
By தமிழ்பயணி, on August 25th, 2013% கடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும், செலாவணி சந்தையிலும் இரத்த ஆறு ஓடியதை பற்றி ஆத்தாவுடன் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளைக்கு முன்னாடி நீ என்னமோ வீடியோ கேம் போல சந்தையில் வியாபாரம் செய்யபோவதாக சொன்னீயே என்ன ஆச்சு என்றார்.
– இது மெய்நிகர் விளையாட்டு – virtual reality games – முறையினை அடிப்படையாக கொண்டது. ஜப்பானியர்களின் டொம்மகாச்சி – http://en.wikipedia.org/wiki/Tamagotchi – எனும் மெய்நிகர் வளர்ப்பு பிராணிகள் போன்றது. இந்த பிராணிகளுக்கு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 5
By தமிழ்பயணி, on August 20th, 2013% வெகு வருட – மன – இடைவெளிக்கு பின்னர் எனது பெரிய சித்தப்பாவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே இன்று சந்தித்தேன். மதிய உணவு + கோபி சில்லி என அமர்களமாக அவருடனேயே முடிந்தது. இருபக்க உற்றார், உறவினர் பற்றிய விவர பரிமாற்றம் இனிதே நடைபெற்றது. விரைவில் முகபுத்தகம்(facebook) வாயிலாக சந்திப்போம் என்றார். அளவில்லா மகிழ்ச்சி.. நமக்கு முந்தைய தலைமுறையான எனது தந்தையார் தலைமுறையில் முதலாவது ஆளாக முகபுத்தகத்தினுள் வருகிறார். எங்கள் குடும்பங்களில் முதலாவதாக . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 4
By தமிழ்பயணி, on August 18th, 2013%
நண்பர் ஒருவர் வந்தார். பங்கு வணிகத்தில் ஈடுபட நினைக்கிறேன். அது பற்றி விவரங்களை சொல்லி தா என்றார். ஆகா நம்ம Saravana Kumar வுக்கு ஒரு வாடிக்கையாளர் அறிமுகம் செய்திடலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். பங்கு என்றால் என்ன, வாங்குதல், விற்றல் என்பது பற்றி அடிப்படை விசயங்களை விளக்கினேன். எல்லாம் முடிந்த பின் உங்களுக்கு தோன்றும் சந்தேகத்தை கேளுங்க என்ற போது நிப்டி(NIFTY) என்றால் என்ன? இதை வாங்கி விற்றால் நல்ல லாபம் வருமா? என்றார். . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 3
By தமிழ்பயணி, on August 17th, 2013%
நேற்று ஆடி கடைசி வெள்ளிகிழமை. காலையில் ஒரு வாடிக்கையாளர் சந்திப்பு நீண்ட நேரம் நடந்தது. புதிய திட்டம் பற்றிய பேச்சுவார்த்தை, கூலி அது இதுவென அனைத்து முடிவு செய்ய பட்ட பின் வரும் திங்கட் கிழமை முதல் துவக்கிடலாம் என்று முடித்து விட்டார். மதியம் சாப்பிடும் போது ஆத்தா இது ஆடி கழிவு (மாத கடைசி) என்பதால் யாரும் புதியன துவங்க மாட்டார்கள் என்று விளக்கம் கொடுத்தார். மதியத்திற்க்கு பின் மற்றொரு வாடிக்கையாளர் அவசரமாக அழைத்தார். . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 2
By தமிழ்பயணி, on August 15th, 2013% சமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 1
|