குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 20th, 2015% இன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் "காந்தியம் இன்று" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்
By தமிழ்பயணி, on September 16th, 2015% நட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on May 1st, 2015% கடந்த சனியன்று (25-04-2015) அன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையிலும் சுமாராக 10,000 பேர் வரையிலும் இறந்திருப்பார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை சீற்றத்தில் இறந்து விட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.
நேபாளத்தை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வரையிலும் உணரபட்டது. பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி
By தமிழ்பயணி, on April 12th, 2015% இந்தியாவில் அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த அசைவம் என்பது பிறரால் பிரித்து உணர்ந்து கொள்ள இயலாது பெரும் சிக்கலான ஒரு விசயம். இது ஏன் இவ்வளவு இடியாப்ப குழப்பமாக மக்கள் கையாள்கிறார்கள் என்று ஆராய புகுந்தால் இந்து மதத்தின் தொன்மம் மற்றும் இளகிய நிலை புரிய வரும். சிக்கலை இரு பெரும் பிரிவுகளா பிரித்து கொள்ளலாம். 1. சைவம் – அசைவம் , 2. அசைவம் – உட்பிரிவுகள்.
. . . → Read More: அசைவம்
By தமிழ்பயணி, on April 5th, 2015% இந்த துண்டு படத்தை பார்த்த போது இருந்து பள்ளி நாட்களில் படித்த பொன்னார் மேனியனே பாடல்தான் நினைவில் நீங்காது திரும்ப, திரும்ப வந்து கொண்டிருக்கிறது. முதல் பாதி அருமை.. இரண்டாம் பாதி மிக அருமை என்று என் தாயார் கூறினார்.. 🙂 🙂 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை . . . → Read More: பொன்னார் மேனியனே
By தமிழ்பயணி, on December 16th, 2014% சரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.
. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..!!!
By தமிழ்பயணி, on November 6th, 2014% எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.ஜெயமோகன் அவர்களின் மிகப்பெரும் படைப்பாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மாலை 5மணிக்கு மியூசியம் தியேட்டர் ஹால், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் கெளரவிக்க பட உள்ளனர்.
. . . → Read More: வெண்முரசு – வெளியீட்டு விழா
By தமிழ்பயணி, on September 9th, 2013% நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
விநாயகரை பற்றிய சில ஒளிபடங்கள் விக்கிபீடியாவிலிருந்து…
முதலாவது படமாக தற்போது உள்ள விநாயகர் சிலைகளில் காலத்தால் பழைமையானதாக இன்றைய ஆப்கனில் 5ம் நூற்றாண்டில் வடிக்க பட்ட (தற்போது பின்னமாக்கபட்ட/மூளியாக்க பட்ட நிலையில்) Kabul ganesh சிற்பம்.
5ம் நூற்றாண்டை சார்ந்த ஆப்கன் விநாயகர் சிலை. பின்னபடுத்த பட்ட/மூளியாக்க பட்ட நிலையில்
அடுத்த படமாக 9ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை. இது இந்தோனோசியாவின் ஜாவா வில் உள்ளது.
9ம் . . . → Read More: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on August 27th, 2013% நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ருக்மணி, கிருஷ்ணா, சத்யபாமா மற்றும் அவர் வாகனம் கருடா. ஒளிபட மூலம் : http://en.wikipedia.org/wiki/Rukmini
எங்கள் ஊரில் நடைபெறும் உறியடி நிகழ்ச்சிகள் பற்றிய அந்த கால சிறுவயது நினைவுகள் மனதில் பசுமையாக மலர்கிறது. உள்ளே இருக்கும் தயிர்வடை . . . → Read More: கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on March 10th, 2013% இந்து மதத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ அன்பர்களின் முக்கிய நாட்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும். மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி இரவே சிவராத்திரி விரதமாக கடைபிடிக்க படுகிறது. ஐந்து வித சிவராத்திரி விரதங்கள் கடைபிடிக்க பட்டு வருகின்றன. அவைகள் விக்கியிலிருந்து….
1.மகாசிவராத்திரி 2.யோகசிவராத்திரி 3.நித்திய சிவராத்திரி 4.பட்ஷிய சிவராத்திரி 5.மாத சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
. . . → Read More: மகா சிவராத்திரி
|