குறிப்புகள் தொடர்பு மின்னஞ்சல் : 
பங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது பங்குவணிகம்-22/10/2014
|
By தமிழ்பயணி, on September 1st, 2020% இந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020
By தமிழ்பயணி, on January 25th, 2016%
நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on December 19th, 2015% இந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…
கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!
By தமிழ்பயணி, on December 2nd, 2015% கனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.
By தமிழ்பயணி, on September 27th, 2015% திரு,ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவலின் கோவை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் நடைபெற்றது. மிகச் சரியாக காலை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் மேலும் நான்கு நண்பர்கள் வந்தடைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பிகை அவர்களும் இணைந்து கொண்டார்.
எதை பற்றி பேசுவது என்பது குறித்த . . . → Read More: கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015
By தமிழ்பயணி, on September 20th, 2015% இன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் "காந்தியம் இன்று" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்
By தமிழ்பயணி, on September 16th, 2015% நட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..!!
By தமிழ்பயணி, on September 9th, 2015%
சென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்..!! நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…!!!
குறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு.
. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015
By தமிழ்பயணி, on August 29th, 2015% படிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.
சீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்
By தமிழ்பயணி, on July 27th, 2015% அப்துல் கலாம்
சற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
|