இன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.
முதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…
இரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….
|
|||||
பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..!! பல்வேறு இயங்குதளங்களை புதியதாக சந்திக்கும் போதும் வரும் அதே ஆர்வம் விண்டோஸ்81 ஐ சந்திக்கும் போதும் வருகிறது. விண்95 ஐ முதன் முதலாக சந்திக்க சேலம் வரை சென்று வந்தது இன்றும் பசுமையாய் என் மனதில் வந்து செல்கிறது. தற்போது அறிமுகமாகியுள்ள விண்8.1 விஸ்டா போலின்றி 98, எக்ஸ்பி போல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றே நம்புகிறேன். இன்றைக்கு என்னுடைய தமிழ்பயணி@ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி முகமறியா நபர்களால் தற்காலிகமாக களவாட பட்டு இருந்தது. நல் வாய்ப்பாக அலைபேசி வழி உறுதியாக்கம் காரணமாக முகவரி மீண்டு விட்டது. பலருக்கும் எரிதம் வகையிலான மடல்கள் சென்றுள்ளதாக அறிகிறேன். echofon என்ற நீட்சியை தீநரி உலாவியில் இணைத்து அதன் வழியாக டிவிட்டர், பேஸ்புக், கூகிள் பஸ் என்று சேவை பெற முயன்றதே உடைப்பர்கள் ஊடுருவக் காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன். எதிர்பாரா அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன். http://isparade.jp/ இந்த சப்பானிய தளத்தில் நாம் டிவீட்டர் பயனாளர் பெயர் அல்லது தேடு சொல் கொடுத்தால் சம்பந்த பட்ட ட்வீட்டுகள் அவரவர் படங்களுடன் பல்லூடக வசதியால் பேரணியாக நடத்தி காட்டுகிறது. பிண்ணனி இசை உள்ளதால் ஒலியமைப்பு வசதியுடன் பார்க்கவும். நான் நம்முடைய சமீபத்திய பிரச்சினையான #tnfisherman என்ற தேடுசொல்லை கொடுத்து பார்த்த போது நம் நண்பர்கள் அனைவரும் தத்தமது ட்வீட்டு கருத்துகளுடன் பேரணியாய் அலைஅலையாய் வந்தார்கள். ஒரு சீரியஸான பேரணி போல இல்லாவிடினும் பேரணி . . . → Read More: ட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman இணைய தள வடிவமைப்பாளர்களுக்கு பெரிதும் உதவும் ஒரு கருவி firebug(தீப்பூச்சி) எனபடுவதாகும். நாம் வடிவமைத்துள்ள இணைய தளப்பக்கத்தை தேவையான படி மாற்றி பார்த்து திருத்த உதவக் கூடியது. எனக்கு அறிமுகம் ஆனபோது தீநரி (firefox) உலாவியில் ஒரு இணைப்பானாக கிடைத்தது. நானும் இது தீநரி உலாவி திறவூற்றிலானது என்பதால் எளிதில் உள்ளிணைப்பாக இணைந்து விடுகிறது. ஆனால் IE யில் கடினம். அவர்கள் தனது உலாவிக்கான செயலியில் பிறஇணைப்பு செய்ய பட வேண்டும் எனில் அவ்வளவு எளிதில் தேவையான . . . → Read More: (IE,CHROME)+FIREBUG கூகிள், யாகூ தேடுயந்திரங்களுக்கு போட்டியாக ஏகப்பட்ட தேடுயந்திரங்கள் வந்து விட்டன. வந்த வேகத்தில் காணாமல் போயும் உள்ளன. அந்த வகையில் இப்போது புதியதாக ஒரு தேடுதளம் வந்துள்ளது. http://blekko.com/ என்பது அதன் பெயர். தற்போது சோதனையோட்டத்தில் (பீட்டா) உள்ளது. புதிய தேடு பொறிகள் எதனை கண்டாலும் அதன் தரத்தை சோதிக்க எளிய தேடு சோதனை செய்வது என் வாடிக்கை. தமிழ் மற்றும் tamil என்ற இரு வார்த்தைகளை உள்ளீடாக கொடுத்து தேடினாலே அந்த தளத்தின் தரம் பற்றி . . . → Read More: புதிய தேடுதளம் – blekko கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி கூகிள் தனது Project 10அடுக்கு100 என்ற தனது திட்டத்தின் கீழான நிதியுதவியினை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பொதுநலன் சார்ந்து நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடிய தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு அளிப்பதற்க்காக யோசனைகளை வரவேற்றது. மேலதிக விவரங்களுக்கான சுட்டி.. http://www.project10tothe100.com/intl/EN_GB/index.html மனித குல மேம்பாட்டிற்க்கான சிறந்த யோசனைகளுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பில் நிதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்க்கான சரியான திட்டத்தை கண்டறிய பொதுவில் அறிவிப்பு கொடுக்க பட்டது. சுமார் . . . → Read More: கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி கடந்த சில நாட்களாக எமது வலைபதிவிற்க்கான சேவி உடைப்பர்களால் (Hacker) ஒரு கைப் பார்க்க பட்டது. தாக்குதலின் முதல் சுவடானது வலைபதிவிலிருந்தே உணர்ந்தேன். சரி முதல்நாள் தான் ஒரு இணைப்பானை நேரிடையாக வழங்கு தளத்திலிருந்து சேவியில் நிறுவியிருந்தேன். அது தான் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறதோ என்று எண்ணம் வந்தது. மெல்லமெல்ல பிறபகுதிகளும் பாதிக்க பட்டது. கூகிளானது தமிழ்பயணி தளத்தினையே மால்வேர் (Malware) பாதிப்புக்குள்ளான தளமாக அறிவித்து சாதரணமாக பயர்பாக்சு, கூகிள் குரோம் போன்றவைகளில் உலாவ இயலா . . . → Read More: மீட்சி ரூ.1500 க்கு (அல்லது $35) என்ற விலையில் இந்திய குழந்தைகளுக்கு கணிணியையும், இணையத்தையும் அளிக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. ஆம் நீண்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளுக்கு பின்னர் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் வெற்றிகரமாக கணிணியை வெளியிட்டுள்ளார். மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ரூ.1500 கணிணியுடன் வெளியிடப் பட்டது முற்றிலும் கணிணி என்று அழைக்க இயலாது. டேப்லெட் எனும் வகையைச் சார்ந்தது. மடிக்கணிணியை விட ஆற்றல் குறைந்ததாகும். . . . → Read More: 1500 ரூபாய் கணிணி |
|||||
Copyright © 2021 தமிழ்பயணி - All Rights Reserved Powered by WordPress & Atahualpa 165 queries. 0.652 seconds. |