குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

மனித நாகரிகத்தை உருவாக்கியது ஆன்மிகமே

இன்றைக்கு குழுமத்தில் நண்பர் செல்வன் அவர்கள் பின்வரும் கட்டுரையை அனுப்பியிருந்தார். அதற்க்கு நானும் என் கருத்தை தெரிவித்து இருந்தேன். அவைகள்..

மனித நாகரிகத்தை உருவாக்கியது ஆன்மிகமே

இதுநாள்வரை கிமு 9600 போது பனியுகம் முடிவடைந்தது எனவும் அப்போது நிறைய மிருகங்களும், தானியங்களும் கிடைத்ததால் மனிதன் மிருகங்களை வளர்க்க துவங்கி ஒரு இடத்தில் தங்க துவங்கினான் எனவும், அப்போது தற்செயலாக தானியத்தை பயிர் செய்வதை கண்டுபிடித்து விவசாய யுகம் துவங்கியது எனவும், விவசாயம் செய்து வேட்டையாட போகாமல் இருந்ததால் . . . → Read More: மனித நாகரிகத்தை உருவாக்கியது ஆன்மிகமே

Share

செந்தாமரைகளே மலருங்கள்..!!

சூன் ஒன்றாம் தேதி தமிழகத்தில் பருவமழை துவங்கும் என்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.இது நாள் வரை மண்டையை பிளக்கும் கோடை வெம்மையுடன் துணை உபத்திரமாக மின்வெட்டு ‍வேறு. நேற்று (1ம் தேதி) மாலை வரை ஓரளவு பிரகாசமாக இருந்த வானம் பின் மெல்ல மப்பும் மந்தாராமான சூழலுக்கு மாறியது.இரவு படுக்கும் போது லேசாக தூறல். பின்னிரவில் நல்ல மழை. பாதி தூக்கத்திலிருந்து எழுந்து அதிசயமாக ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியினை நிறுத்தி விட்டு சற்று கனமான போர்வையை . . . → Read More: செந்தாமரைகளே மலருங்கள்..!!

Share

மின்னஞ்சல் முகவரி திருட்டு

இன்றைக்கு என்னுடைய தமிழ்பயணி@ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி முகமறியா நபர்களால் தற்காலிகமாக களவாட பட்டு இருந்தது. நல் வாய்ப்பாக அலைபேசி வழி உறுதியாக்கம் காரணமாக முகவரி மீண்டு விட்டது. பலருக்கும் எரிதம் வகையிலான மடல்கள் சென்றுள்ளதாக அறிகிறேன்.

echofon என்ற நீட்சியை தீநரி உலாவியில் இணைத்து அதன் வழியாக டிவிட்டர், பேஸ்புக், கூகிள் பஸ் என்று சேவை பெற முயன்றதே உடைப்பர்கள் ஊடுருவக் காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

எதிர்பாரா அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன்.

Share

இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

கண்ணேதிரே நிகழும் சரித்திர நிகழ்வை பற்றிய சில வரிகள். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நம் பாரத நாடு எண்ணெற்ற படையெடுப்புகள், மொழி, கலாச்சர, மத ரீதியிலான ஆதிக்கங்கள், ஆட்சி முறை மாற்றங்கள் போன்றவற்றை தாங்கி கொண்டு செறித்த வண்ணம் உள்ளது.

என் அறிவு சரியானதாக இருப்பின் உலகில் வேறு எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் பொதுவுடமை கட்சியினர் தொடர்ந்து இவ்வளவு காலம் கிட்டதட்ட 35 வருடங்களாக இடைவெளியின்றி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார்கள். நாட்டின் ஒரு பகுதியில் வேறெந்த இடையூறும் . . . → Read More: இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

Share

முதல்வருக்கு வாழ்த்துகள்..!!

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு – ஒளிப்படம் தினமலர்காம்

இன்று(16-05-2011) மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நமது வாழ்த்துகள்..!!

Share

மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவில் என் வாக்கை வெற்றிகரமாக செலுத்தியாச்சு. நல்ல விறுவிறுப்பான வாக்குபதிவு. பலரும் சொல்லுவது போல மோசமானவர்களில் ஓரளவு நல்லவரை தெரிவு செய்ய ரொம்ப எல்லாம் சங்கடமோ சிரமமோ இல்லை.

ஒரு மோசமான முதலாளி, தொழிலாளி, வாடிக்கையாளர், அண்டைஅயலாரை நம்மால் பொறுத்துக் கொள்ள இயலுவ தில்லையா என்ன..? மோசமானவர்களுக்கு பயந்து என்ன செய்து விடுகிறோம்..?

ஒவ்வொரு தேர்தலில் புதுமையை புகுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் சிறிய பணவசதி அற்ற வேட்பாளருக்கும், . . . → Read More: மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..!!

Share

இந்திய அணிக்கு வாழ்த்துகள்!!

உலக கோப்பை கிரிக்கெட் 2011

கிரிக்கெட் உலக கோப்பை 2011 ஐ வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்..!!

Share

ஊர் உலகம்-16-02-2011

சமீபத்தில் பார்த்த இரு யூடியூப் குறும்படங்கள் மனதில் மீண்டும் மீண்டும் காட்சி படுத்தப் பட்டு கொண்டே உள்ளன. அவைகள் குறித்தும், அவைகள் குறித்து கிடைத்த அறிமுக குறிப்புகளும்.

ஜனகண மன என்று தொடங்கும் தேசிய கீதம் நம் அனைவருக்கும் மனப்பாடம். அதைப் பாடும்போது அதற்கென ரையறுக்கப்பட்டுள்ள பண்ணில் உரக்கப் பாடுவதும் நமக்குப் பழக்கம்தான். ஆனால், அது மௌனமாகப் பாடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலர் இந்த மௌனகீதம் இசைக்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். கேட்டிருக்கமுடியாது.

சமீபத்தில் முத்ரா என்ற விளம்பர நிறுவனம் . . . → Read More: ஊர் உலகம்-16-02-2011

Share

ட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman

http://isparade.jp/

இந்த சப்பானிய தளத்தில் நாம் டிவீட்டர் பயனாளர் பெயர் அல்லது தேடு சொல் கொடுத்தால் சம்பந்த பட்ட ட்வீட்டுகள் அவரவர் படங்களுடன் பல்லூடக வசதியால் பேரணியாக நடத்தி காட்டுகிறது. பிண்ணனி இசை உள்ளதால் ஒலியமைப்பு வசதியுடன் பார்க்கவும். நான் நம்முடைய சமீபத்திய பிரச்சினையான

#tnfisherman

என்ற தேடுசொல்லை கொடுத்து பார்த்த போது நம் நண்பர்கள் அனைவரும் தத்தமது ட்வீட்டு கருத்துகளுடன் பேரணியாய் அலைஅலையாய் வந்தார்கள். ஒரு சீரியஸான பேரணி போல இல்லாவிடினும் பேரணி . . . → Read More: ட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman

Share

குடியரசு தினம்

குடியரசு தினம்

சில தினங்களுக்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த ஒளிபடம். இது போன்ற பல தேசாபிமானிகளால் இந்தியா இன்னமும் எழுச்சி கொள்ளும் நம்பிக்கையுடன் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!

Share