புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

முதலாளித்துவம் Vs சூதாட்டம்

குழுமத்தில் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் எனது வாதத்தை இங்கே தொகுத்துள்ளேன். ஏனோ இங்கே போட்டு வைப்பது தேவை என்று படுகிறது.

இந்த இணைய வழிவணிகத்தில் அடிப்படை குழப்பம் உள்ளது. இருவேறு முறைகளை மக்கள் குழப்பி கொள்கிறார்கள்.

பங்கு சந்தை இணைய வழி வணிகத்தில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, விற்க செய்யலாம். இது சுதந்திர பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பே. இதை ஏற்பதில்லை மாற்று கருத்து கிடையாது.

இதே பங்குசந்தையிலும், காமாடிட்டி சந்தையிலும் இணைய வழி . . . → Read More: முதலாளித்துவம் Vs சூதாட்டம்

Share

டெல்லி முற்றுகை

அமெரிக்காவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை போல இங்கும் வர போவது நிச்சயம். எனவே விரைவில் நடைபெற உள்ள டெல்லி முற்றுக‍ை போராட்டத்திற்க்கு தேவையான வேண்டுகோள் பட்டியல்…

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.200 வீதம் அதிகரிக்க வேண்டும். வேலையே இல்லாதவர்கள் அலுவலகங்களின் மூலாதாரங்களை . . . → Read More: டெல்லி முற்றுகை

Share

யுவான் Vs டாலர்

முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…

அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.

எப்ப‍டியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர்

Share

நீரின்றி அமையா உலகு

குவார்ட்டர், கட்டிங் என்பதே தவறானதல்ல என்றாகி விட்ட தமிழ் கூறும் நல்லுகத்தில் குடிநீர் பாட்டில் காசு கொடுத்து வாங்குவது என்பது சிந்திக்க கூட தகாத காரியமாகி விட்டது. எங்கு கிளம்பினும் கையில் ஒரு குடிநீர் பாட்டில் வைத்திருப்பது என்பது மிக மிக அத்தியாவசியமாகி விட்டது. நீரை கையில் வைத்திருப்பது தவறல்ல. அதை காசு கொடுத்து வாங்குவது தான் மிகவும் தவறான மனநிலை என்கிறார்கள் இந்த குறும்படத்தை எடுத்தவர்கள். சரிதான் குடிக்க சுத்தமான தண்ணீரை அளிக்க வேண்டிய . . . → Read More: நீரின்றி அமையா உலகு

Share

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிள் தனது Project 10அடுக்கு100 என்ற தனது திட்டத்தின் கீழான நிதியுதவியினை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பொதுநலன் சார்ந்து நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடிய தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு அளிப்பதற்க்காக யோசனைகளை வரவேற்றது. மேலதிக விவரங்களுக்கான சுட்டி..

http://www.project10tothe100.com/intl/EN_GB/index.html

மனித குல மேம்பாட்டிற்க்கான சிறந்த யோசனைகளுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பில் நிதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்க்கான சரியான திட்டத்தை கண்டறிய பொதுவில் அறிவிப்பு கொடுக்க பட்டது. சுமார் . . . → Read More: கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

Share

இன்டெக் – 2010

சென்னையிலிருந்து பாண்டி அண்ணாச்சி இன்டெக் பார்க்க ஆர்வத்துடன் வந்ததால் நானும் கிளம்பியாச்சு. கோவையில் இன்னமும் இயந்திரவியல் நிறுவனங்கள‍ே பெரிதும் நிலைக் கொண்டுள்ளது நிரூபிக்க பட்டது. முன்பு மூன்று அரங்கங்களுடன் இருந்த கொடீசியா இப்போது ஐந்து அரங்கும் நிறையும் அளவு நிறுவனங்களால் ஆக்ரமிக்க பட்டிருந்தது. வளர்ச்சியை கண்டு ஆனந்தபடாதவர்கள் யாரும் உள்ளனரோ..?

‍இன்டெக் 2010 – பாண்டியன்

வந்த விருந்தாளியை சரியா கவனிக்கலேன்னு யாரும் பேசிடக் கூடாது பாருங்க… அதான் ஐஸ் வாங்கி கொடுத்து அவரை குளிர்விக்கிறேன். . . . → Read More: இன்டெக் – 2010

Share

இன்டெக்-2010-அழைப்பு

இன்டெக் – 2010

INTEC 2010 – இன்டெக் 2010

இன்டெக் என்பது கோவையில் நடைபெறும் தொழிற் கண்காட்சியாகும். அதாங்க நம்ம செம்மொழி மாநாடு நடைபெற்றதே அந்த இடம் தான். வெளிநாடு மற்றும் இந்தியாவின் எண்ணற்ற பெரிய, சிறிய, குறுந் ‍தொழில் நிறுவனங்கள் கலந்துக்கிட்டு சிறப்பா வியாபாரம் பண்ண போறாங்க. தொழில் சம்பந்த பட்ட மற்றும் தொழில் துவங்க எண்ணியுள்ள அனைவரும் வருக.. வருக.. என அழைக்கப் படுகிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு . . . → Read More: இன்டெக்-2010-அழைப்பு

Share

பகல் கனவு

சும்மா பங்குன்னா என்ன, வியாபாரம் அப்படின்னா என்ன அப்படின்னு கொஞ்சம் குட்டைய குழப்பிய கட்டுரையை எழுதிய மயக்கத்தில் மதியானம் அம்மா கொஞ்சம் சோறு அதிகமா போட்டு விட்டதாலும், ஆற்காட்டார் புண்ணியத்தில் மின் வழங்கல் இல்லாததாலும் லேசா கண்ண மூடினேன்.

பகல் கனவு

வழக்கமா வந்து போற அம்மிணிகளுக்கு பதிலா இன்னைக்குன்னு பாத்து எங்க அப்பாரு வந்தாரு. வந்தவரு என்ன மவனே என்ன பண்றேன்னு தேனொழுக விசாரிச்சாரு… அப்பறமா உலக நாயம் எல்லாம் . . . → Read More: பகல் கனவு

Share

பங்கு முதலீடு – கருத்துரு

பங்கு முதலீடு பற்றி ஒரு எளிய எடுத்துக் காட்டுடன் விளக்க முயலுகிறேன்.

நம் குடியிருப்பு பகுதியில் தேநீர் கடை இல்லை. என்ன செய்வது புதிதாக உருவாகி வரும் பகுதி என்பதால் யாரும் கடை வைக்கவில்லை. எப்படியோ பெரிசுகள் எல்லாம் கூடி பேசி ஒரு ஆசாமி(பழனிச் சாமி)யை பிடிக்கிறார்கள். அவரே எனக்கு தொழில் தான் தெரியுமோ ஒழிய கடை வைக்கும் அளவுக்கு கையில் முதல் இல்லை என்கிறார். சரி என அனைத்து வீட்டாரும் கூடிப் பேசி ஆளுக்கு ஆயிரம் . . . → Read More: பங்கு முதலீடு – கருத்துரு

Share