குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • பங்குவணிகம்-16/06/2017 (2)
    • தமிழ்பயணி { வணக்கம். பொதுவாக இருவகை படுகிறது. fundamental & technical எனப்படும். இதனை பற்றி ஓரளவு அறிய பின்வரும் சுட்டிகள் உதவகூடும்.. http://www.investopedia.com/university/technical/techanalysis2.asp http://www.investopedia.com/ask/answers/131.asp https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/difference-between-fundamental-and-technical-analysis https://www.kotaksecurities.com/ksweb/Research/Investment-Knowledge-Bank/stock-market-analysis http://www.dummies.com/personal-finance/investing/stocks-trading/fundamental-and-technical-analysis-for-stock-investors/ - இவ்விரண்டில் தங்கள் மனோபாவம் எதை... } – Jun 21, 7:43 AM
    • moganadasse { sir, I want to enter to this world. where and how I will get my basic knowledge. kindly guide me. moganadasse.k.m. } – Jun 19, 12:25 PM
  • பங்குவணிகம்-22/02/2017-1 (6)
    • Pandian Ramaiah { சபாஷ். சரியான கேள்வி } – Apr 17, 8:41 AM
    • GMR { Thanks Siva. In your blog, you used to mention about purchase of shares and selling of same but you are not disclosing the factors to... } – Mar 17, 9:24 PM
    • தமிழ்பயணி { வணக்கம் நண்ப​ரே. தங்கள் கருத்து மிக சரி​யே. தங்களின் எண்ணம் ​போல முதலீட்டு விசயங்க​ளை பகிர்ந்து ​கொள்ள​வே இத​னை 22/10/2014 (http://siva.tamilpayani.com/archives/616) அன்று துவக்கி​​னேன். அன்றிலிருந்து இன்று வ​ரையிலும் யாரு​மே இது எப்படி என்று... } – Mar 09, 7:50 PM
  • Older »

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 20 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

குடியரசு தின வாழ்த்துகள் – 2016

நண்பர்கள், வாடிக்​கையாளர்கள், வாசகர்கள்  அ​னைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..!!

Share

சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!

இந்த கட்டு​ரை இன்​றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) ​செய்தியின் மீள்பதிவு. ​செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…

கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!

Share

​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி

கடந்த சனியன்று (25-04-2015) அன்று ​நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவ​ரையிலும் சுமாராக 10,000 ​பேர் வ​​ரையிலும் இறந்திருப்பார்கள் என்று ​செய்திகள் ​தெரிவிக்கின்றன. இயற்​கை சீற்றத்தில் இறந்து விட்ட அ​னைவருக்கும் எனது அஞ்சலிகள்.

​​நேபாளத்​தை ​மையமாக ​கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வ​ரையிலும் உணரபட்டது. பல உயிர்​​சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

ஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: ​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி

Share

நன்றி. வணக்கம். சனீஸ்வர​ரே..!!!

    சரியாக ஏழ​ரை ஆண்டுகளுக்கு முன்னர் என்​னை வந்த​டைந்த நண்பர் சனீஸ்வரர் பல்​வேறு பாடங்க​ளை கற்று ​கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் ​தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது ​கொஞ்சம் நஞ்சமல்ல. ​சொந்த வாழ்விலும், ​தொழில், ​பொருளாதார வாழ்விலும் ​தொடர் ​தோல்விகள் என்றால் ​அளவிட்டு ​சொல்லும் படியாக இல்​லை. அத்த​னை நி​றைய. ​தொட்ட​தெல்லாம் விளங்கினாப்​லே என்று மக்கள் ​சொல்லுவது அப்படி ​பொருந்தி வந்தது என்றால் ​கொஞ்சமும் மி​கையில்​லை.

. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வர​ரே..!!!

Share

திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!

அன்பின் அய்யா திரு.ஞான​வெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் ​தொடர்ந்து எழுதி வருபவர். ​

நேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி ​சென்று இருந்​தோம். தனிபட்ட ​வே​லையாக. திருச்சி பு​கைவண்டி நி​லையத்தில் அமர்ந்து ​பேசி ​கொண்டு இருக்கும் ​போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) ​போடுவ​து ​போல நாமும் ​போட்டு விடலாம் என்று படம் எடுத்​தேன். . . . → Read More: திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!!

Share

கவன சிதறல்கள்

        முற்காலத்தில் உ​ழைப்பு என்பத​னை நிர்ணயம் ​செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது ​போல Theater, Bar, Beach, Tennis Court ​போன்ற​வைகள் மனிதர்க​ளை தி​சை திருப்பி உற்பத்தி திற​னை பாதிப்பதாக இருந்தன. இ​வைகளில் ​நேரத்​தை வீணடிக்க ​வேண்டாம் என்று பலரும் ஆ​​லோச​னை ​சொல்லுவதுண்டு. இன்​றைய நவீன காலத்தில் இ​வை ​போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய தி​சை திருப்பல்கள் வந்துள்ளன. ​பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் ​போன்ற​வைகள் ஆகும்.

. . . → Read More: கவன சிதறல்கள்

Share

கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது.

வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நல்ல நிகழ்ச்சி இன்று என் தங்​கை மகனுக்கு இனி​தே ந​டை​பெற்றது. எந்த வித மத சடங்குகளுமின்றி, ஆங்கில வழி வி​ளையாட்டு பள்ளிகளுமின்றி (play school) எளி​மையாய் தமிழ்நாடு அரசின் அங்கன்வாடி என்னும் பால்வாடியில் ​​ சேர்க்க பட்டதுடன் நி​றைவு ​பெற்றது.

வித்யாரம்பம்

பல்​வேறு நண்பர்கள், உறவினர்கள் . . . → Read More: கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

Share

பிறந்தநாள் வாழ்த்துகள்..!!

எனது தந்​தைக்கு பிறந்த நாள். அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ​தெரிவிப்ப​தைவிட மகிழ்வான ​செயல் ​வே​றென்ன இருக்கிறது..?!! வாழ்த்த வயதில்​லை என்று ​சொல்லுவ​தை விட நூற்றாண்டுகள் வாழ்ந்து எங்க​ளை வழிநடத்த ​வேண்டுகி​றேன்.

புத்த கயாவில்

காசி பயணத்தில்

Share