சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015

திரு,​ஜெய​மோகன் அவர்களின் ​வெண்முரசு நாவலின் ​கோ​வை வட்டார வாசகர்களின் சந்திப்பு இன்று ஏற்பாடு ​செய்ய பட்டிருந்தது. நண்பர் விஜய் அவர்களின் அலுவலகத்தினுள் ந​டை​பெற்றது. மிகச் சரியாக கா​லை 10மணிக்கு துவங்கியது. விஜய், ராதா கிருஷ்ணன், ஈ​ரோடிலிருந்து மணவாளன், கிருஷ்ணன் மற்றும் நான் என்பதாக துவங்கியது. ஓரிரு நிமிடங்களில் ​மேலும் நான்கு நண்பர்கள் வந்த​டைந்தார்கள். இவர்களுடன் மீனாம்பி​​கை அவர்களும் இ​ணைந்து ​கொண்டார்.
    
    கோவை வெண்முரசு வாசகர் அரங்கு

எ​தை பற்றி ​பேசுவது என்பது குறித்த சரியான முன்​யோச​னையில்லாது இருந்த நண்பர்க​ளை ஈ​ரோடு வழக்கறிஞர் கிருஷ்ணன் மிக நன்றாக வழிநடத்த ​தொடங்கினார். ஒரு நூலுக்கு இருக்க ​வேண்டிய தரிசனம், குறிக்​கோள் ​போன்ற​வைக​ளை ​வெண்முரசு எப்படி பழுதற நி​றைவு ​​செய்துள்ளது என்ப​தை பற்றி விரிவாக எடுத்து​ரைத்தார். ​தொடர்ந்து மற்றவர்களும் அவரவர் பார்​வையிலான ​வெண்முரசு பற்றி ​பேசி​னோம். இதன் பின்னர் மீண்டும் அவரிட​மே ​பேச்சு ​போய் நின்றது. ​​தொடர்ந்து அவ​ரே ​வெண்முரசின் பல்​வேறு காட்சிக​ளை எப்படி பார்ப்பது என்ப​தை சு​வைபட விவரித்தார். முதற்கனலில் வரும் சிங்கம் பசுமாட்டி​னை ​கொன்று தின்பது, பிஷ்மர் அம்​பை க​டைசி சந்திப்பு ​போன்ற​வைகள்.

கோவை வெண்முரசு வாசகர் அரங்கு
 இந்த சந்திப்பிற்கு மரபின் ​மைந்தன் முத்​தையா வருவதாக இருந்து க​டைசி நிமிடத்தில் வரஇயலாது ​போனது. அ​தே ​போல நண்பர் சு​ரேஷ் மற்றும் சுசிலாம்மாவும் வர இயலாது ​போனது.
    
    கோவை வெண்முரசு வாசகர் அரங்கு    
விருந்​தோம்பல் பற்றி கூறாவிடின் விழா நி​றைவ​டையாது. திரு.விஜய் சந்திப்பின் துவக்கத்திலிருந்து ​கேக், மிச்சர், காபி, குளிர்பானம் மற்றும் மதிய உணவாக ​சைவ+அ​சைவ விருந்தளித்தார். ​செவிக்கும், வாய்க்கும் ஒ​ரே சமயத்தில் பலத்த விருந்து.

 

Share

1 comment to கோவை வெண்முரசு வாசகர் அரங்கு – 27/09/2015

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>