சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!!

நண்பர்கள் அ​னைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

விநாயக​ரை பற்றிய சில ஒளிபடங்கள் விக்கிபீடியாவிலிருந்து…

முதலாவது படமாக தற்​போது உள்ள விநாயகர் சி​லைகளில் காலத்தால் ப​ழை​மையானதாக இன்​றைய ஆப்கனில் 5ம் நூற்றாண்டில் வடிக்க பட்ட (தற்​போது பின்னமாக்கபட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்) Kabul ganesh சிற்பம்.

5ம் நூற்றாண்​டை சார்ந்த ஆப்கன் விநாயகர் சி​லை. பின்னபடுத்த பட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்

5ம் நூற்றாண்​டை சார்ந்த ஆப்கன் விநாயகர் சி​லை. பின்னபடுத்த பட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்

அடுத்த படமாக 9ம் நூற்றாண்​​டை ​​சேர்ந்த சி​லை. இது இந்​தோ​னோசியாவின் ஜாவா வில் உள்ளது.

9ம் நூற்றாண்​டை சார்ந்த இந்​தோ​னோசியா ஜாவாவில் உள்ள விநாயகர் சி​லை.

9ம் நூற்றாண்​டை சார்ந்த இந்​தோ​னோசியா ஜாவாவில் உள்ள விநாயகர் சி​லை.

அடுத்ததாக விசாய ​பெருமான் மகாபாரதத்​தை உ​ரைக்க அத​னை ஒ​லையில் எழுதும் விநாயகராக அங்​கோர் வாட் திருக்​கோவிலில்
காணப்படுவது. இது 12ம் நூற்றாண்​டை சார்ந்ததாக கருதபடுகிறது.

அங்​கோர் வாட் ​கோவிலில் வியாச ​பெருமான் பாரதம் உ​ரைக்க விநாயகர் எழுதும் காட்சி.

அங்​கோர் வாட் ​கோவிலில் வியாச ​பெருமான் பாரதம் உ​ரைக்க விநாயகர் எழுதும் காட்சி

13ம் நூற்றாண்​டை சார்ந்த கர்நாடக மாநிலம், ​மைசூர் மாவட்டதில் உள்ள சி​லை.

​​மைசூரில் உள்ள 13ம் நூற்றாண்டு விநாயகர் சி​லை

​​மைசூரில் உள்ள 13ம் நூற்றாண்டு விநாயகர் சி​லை

தி​பெத்தில் துணியில் வ​ரையபட்டுள்ள ஓவியம் 15ம் நூற்றாண்டுக்கு முந்​தைய காலகட்டத்​தை ​சேர்ந்தது.

15ம் நூற்றாண்​டை சார்ந்த தி​பெத்திய துணியிலான விநாயகர் ஓவியம்

15ம் நூற்றாண்​டை சார்ந்த தி​பெத்திய துணியிலான விநாயகர் ஓவியம்

http://www.youtube.com/watch?v=LMwyhkxW0j4

இந்த விநாயகர் பாட​லை பார்த்த பின் தான் எத்த​னை விசயங்க​ளை இழந்துள்​ளோம் என்ப​தே புரிய வருகிறது. என் சிறுவயதில் இந்த பாடலில் உள்ளது ​போல தான் அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருப்பார். ​​பையன்கள் அந்த பகுதி​யை சுற்றி வி​ளையாடி  ​கொண்டிருப்பார்கள். யார் சிதறு ​தேங்காய், ப​டையல் ​போட்டாலும் சரி விநாயகருக்​கு சிறு துண்டு கூட கி​டைக்காது.. 🙂 🙂

அ​தே ​போல விநாயக​ரை வணங்க வருபவர்கள் அவர்க​ளே குடத்தில் நீர் ​​கொண்டு வந்து விட்டு கழுவி,தாங்க​ளே அலங்காரம் ​செய்து வழிபடலாம். மலர்க​ளையும், அருகம்புல்​க​ளையும் ​வைத்து மனம் ​போல அலங்கரிக்கலாம். அவரவ​ரே சூடம் காட்டி வழிபட்டு ​செல்லலாம். முற்காலத்தில் இளவட்ட ​பையன்கள் எண்ணிக்​கை​யை ​பொறுத்து விநாயகர் சதுர்த்திக்கு முதல் தின இரவு 108 அல்லது 1008 குடம் நீர் கிணற்றிலிருந்து ​சேந்தி நீர் அபி​சேகமாக ​செய்து சி​லை​யை எண்​ணை பிசுக்கு ​போக கழுவி விடு​வார்கள்.

இன்​றைக்கு நவநாகரீக ​கோவில் கட்டி, வழுவழு த​ரை​யெல்லாம் ​செய்து அரசமரத்தடியிலிருந்த விநாயக​ரை தனி​யே பிரித்து காப்பு ​செய்துள்​ளோம். எந்த சிறுவனும் அவ​ர் திரு​மேனி​யை ​தொட முடியாது.

ஊரின் ​பொருளாதார வளர்ச்சி நண்பனாய் இருந்தவ​ரை, ​மரியா​தைக்குரியவ​ராக மாற்றி விட்டது.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>