சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

​வெண்முரசு – ​வெளியீட்டு விழா

எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு.​ஜெய​மோகன் அவர்களின் மிகப்​பெரும் ப​டைப்பாக ​தொடர்ந்து ​வெளிவந்து ​கொண்டிருக்கும் ​வெண்முரசு ​தொடரின் முதல் நான்கு நாவல்கள் வரும் நவம்பர் 9, 2014 அன்று மா​லை 5மணிக்கு மியூசியம் தி​யேட்டர் ஹால், ​சென்​னை என்ற முகவரியில் ந​டை​பெற உள்ளது. இதில் புகழ்​பெற்ற மகாபாரத பிரசங்கிகளான ஐவர் ​கெளரவிக்க பட உள்ளனர்.

​வெண்முரசு - ​வெளியீட்டு விழா

​வெண்முரசு - ​வெளியீட்டு விழா

​வெண்முரசு - ​வெளியீட்டு விழா

​வெண்முரசு - ​வெளியீட்டு விழா

திரு.நாஞ்சில் நாடன், திரு.பிரபஞ்சன், திரு.அ​​சோகமித்திரன், திரு.பி.ஏ.கிருஷ்ணன் ​போன்ற எழுத்தாளர்கள் கலந்து ​கொண்டு சிறப்பு​ரையாற்ற உள்ளார்கள். திரு.கமல்ஹாசன், திரு.இ​ளையராஜா ஆகிய புத்தகங்க​ளை ​வெளியிட்டு வாழ்த்து​ரை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து வந்துள்ள வாழ்த்து​ரைகள் சில…

இந்த விழா ஏன் ​தே​வை என்ப​தை திரு.​ஜெய​மோகன் அவர்கள் வார்த்​​தைகளி​லே​யே…

வெண்முரசு நூல்கள் அளவில் பெரியவை. தொடர்ச்சியாக வருடம் நாலைந்து நூல்கள் என வந்துகொண்டே இருக்கப்போகின்றவை. நம் வாசகர்களின் வாசிப்புப் பழக்கமும் நூல்களை வாங்கும் மனநிலையும் நாமறிந்ததே. என் நூல்கள் எவையும் பல்லாண்டுகளாக நூலகங்களுக்கு வாங்கப்படுவதில்லை. இடதுசாரிகளின் கையில் இருக்கும் கல்லூரி நூலகச்சூழலிலும் அவற்றை வாங்கலாகாது என்ற ரகசியப்புரிதல் உள்ளது. ஆகவே முழுக்கமுழுக்க வாசகர்களை நம்பியே இந்நூல்கள் வெளியாகின்றன

இந்தநூல்கள் தொடர்ந்து வெளியாகும்போது ஒன்று நிகழும். முதல் ஏழெட்டு நூல்களுக்குப்பின் அவற்றை வாங்காதவர்கள் அடுத்தடுத்த நூல்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஆகவே விற்பனை குறையவே செய்யும். ஆரம்பத்திலேயே கணிசமான வாசகர்களை சென்றடைவதே இவ்வரிசை முழுமையடைய அவசியமானது.

நம் வாசகர்களுக்கு விலை ஒரு பெரிய பிரச்சினை என்பதனால் வெண்முரசு நூல்கள் அடக்கவிலைக்கு மிக அருகே விலைவைக்கப்படுகின்றன. ஆகவே அவற்றின் லாபம் மிகக்குறைவு. முன்விலை வெளியிட்டின் மூலம் வரும் பணம் முதலீட்டின் ஒருபகுதியாக இருப்பதனால்தான் நூல்கள் வெளியாகவே முடிகிறது. முன்விலைவெளியீட்டில் நூல்களை வாங்குபவர்கள் மட்டுமே உண்மையில் இந்நூலின் புரவலர்கள்

ஆகவே நற்றிணைப் பதிப்பகம் அனேகமாக லாபமே இல்லாமல்தான் இதுவரை இந்நூல்வரிசையை வெளியிட்டுவருகிறது. இதன் பதிப்புரிமைத்தொகை ஓவியருக்குச் செல்கிறது. [அவரது உழைப்புக்கு அதுவே மிகச்சிறிய தொகைதான்] ஆகவே எனக்கு இந்நூல்களில் இருந்து ஒரு பைசாகூட வருவதில்லை. இவ்வுழைப்பு என்னைப்பொறுத்தவரை முழுக்கமுழுக்க மனநிறைவுக்கு மட்டுமானது.

இச்சூழலில் பதிப்பகம் சோர்ந்துவிடலாகாது என்பது முக்கியமானது. என்னதான் நற்றிணை யுகன் என் வாசகரும் நண்பருமாக இருந்தாலும் தொடர்ந்து நஷ்டம் வருமென்றால் அவரிடம் நூல்களை வெளியிடும்படி சொல்ல முடியாத நிலை வரும். அது நிகழலாகாது

ஆகவே இந்நூல்களை குறைந்தபட்சப் பிரதிகளாவது விற்றாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதிகபட்ச விற்பனை என்பதெல்லாம் இலக்கு அல்ல, அது இங்கே சாத்தியமும் அல்ல. காரணம், இந்நூல்களின் அடர்த்தி மற்றும் நுட்பம் காரணமாகவே பரவலான பொதுவாசகர்கள் இதை வாங்கி வாசிக்க முன்வரமாட்டார்கள்.

 

நண்பர்கள் அ​னைவரும் தவறாது விழாவில் கலந்து ​கொள்ளவும்.

குறிப்பு : ​மேற்க்கண்டுள்ள விழா அ​ழைப்பிதழ்கள், படங்கள் திரு.​ஜெய​மோகன் அவர்கள் இ​ணையதளத்திலிருந்து எடுக்க பட்டு விளம்பர ​​நோக்கில்/குறிப்பு​ரை ​நோக்கில் மட்டு​மே பயன்படுத்த பட்டுள்ளது.

 

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>