சமீபத்திய இடுகைகள்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நன்றி. வணக்கம். சனீஸ்வர​ரே..!!!

    சரியாக ஏழ​ரை ஆண்டுகளுக்கு முன்னர் என்​னை வந்த​டைந்த நண்பர் சனீஸ்வரர் பல்​வேறு பாடங்க​ளை கற்று ​கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் ​தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது ​கொஞ்சம் நஞ்சமல்ல. ​சொந்த வாழ்விலும், ​தொழில், ​பொருளாதார வாழ்விலும் ​தொடர் ​தோல்விகள் என்றால் ​அளவிட்டு ​சொல்லும் படியாக இல்​லை. அத்த​னை நி​றைய. ​தொட்ட​தெல்லாம் விளங்கினாப்​லே என்று மக்கள் ​சொல்லுவது அப்படி ​பொருந்தி வந்தது என்றால் ​கொஞ்சமும் மி​கையில்​லை.

சனிபகவான்

    ஆனாலும் எனக்கு அவர் அளித்துள்ள நன்​மைகளும் அளவிட அரியது. நம்மு​டைய ஒரு ரூபாய் காணாமல் ​போனால் வருவ​தை காட்டிலும் நம்மிடம் ​கோடி ரூபாய் இருந்து காணாமல் ​போனால் தான் நமக்கு வருத்தம் மிக ​பெரியஅளவில் இருக்கும் என்று பல்​வேறு வாய்புக​ளை கண்முன் ​கொண்டு வந்து நிறுத்தி அது நம்​மை ​நோக்கி வருபது ​போல ​செய்து க​லைந்து ​போக ​செய்த லீலா வி​​னோதங்கள் மிக மிக அதிகம். இப்​போ​தெல்லாம் எந்த திட்டம், வியாபாரம் அல்லது ​யோச​​​னைகள் பற்றி ​பேச்சு வந்தாலும் சரி ​ஜென் நி​லையில் எடுத்து ​கொள்ளும் ம​னோபாவம் ஆகி விட்டது. ஏப்படியாகின் – கா​சோ​லை நடப்பான பிற​​கே.. (cheque after realization) என்ற தாரக மந்திரத்​தை​யே உச்சரித்து ​கொள்​வேன். எந்த லாப​மோ, அனுகூல​மோ ஏதாக இருப்பினும் அது நம் ​கைக்கு வந்த பின்னர் மட்டு​மே உண்​மை. க​லைந்து விட்ட சூழல்களும், இழப்புகளும் எண்ணற்ற​வைகள்.

    எப்படி பட்ட ​தோல்விகளும். சரிவுகளும் வந்தாலும் எதிர்​கொள்ளும் ம​னோபாவத்​தை அளவின்றி அளித்துள்ள சனி பகவான் என் கட்டத்திலிருந்து ​வேறுக்கு ​செல்வதா இன்று என் தாயார் கூறினார்கள். அவர்கள் நம்பிக்​கை அவர்களுக்கு. ஆ​கையினால் இந்த சந்தர்ப்பத்தில் சனீஸ்வரருக்கு எனது நன்றிக​ளையும், வணக்கங்க​ளையும் ​தெரிவித்து ​கொள்கி​றேன்.

 

Share

1 comment to நன்றி. வணக்கம். சனீஸ்வர​ரே..!!!

  • எப்படி எல்லாம் ஐசு வைக்கவேண்டி உள்ளது.

    சனி பகவான் அடிவருடி என்று உமக்கு நாமகரணம் சூட்டுகிறேன்.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>